அனிமேஷன் என்ற மாயை !

anigrndinosaur3

இன்று நாம் பார்த்துக் கொண்டிருக்கும் TV காட்சிகள், சினிமா,  போன்ற அசையும் (Animation)படங்கள் எப்படி நம் கண்களுக்கு காட்டப்படுகின்றன ?

Animation எனப்படும் இந்த அசையும் படங்கள் உண்மையில் நம் கண்களை ஏமாற்றும் ஒரு வித்தை. கி.பி.130 களில் இந்த அனிமேஷன் அடிப்படையை கிரேக்க வானியலாளரான தால்மி என்பவர் கண்டுபிடித்தார். இந்த கோட்பாடு பின்னர் பரிணாம வளர்ச்சியடைந்தது. இதண்  விளைவாக ஒளி மற்றும் மனித கண் உடற்கூறியல் மற்றும் நடத்தை பற்றிய கண்காணிப்பு   மற்றும் ஆய்வுகள் தொடர்ந்தன.

இந்த   அனிமேஷன் கோட்பாட்டின் அடிப்படை என்ன என்பதை ஆராய்வோம்.

நமது விழித்திரைகள் தாம் காணும் ஒரு காட்சியை 1/10 நொடிகள் தக்க வைத்துக்கொள்கின்றன. அதாவது நீங்கள் ஒரு காட்சியை பார்த்து முடித்த பின்னரும் ஒரு வினாடியின் பத்தின் ஒரு பங்கு கால அளவு உங்கள் கண்களை விட்டு அந்த காட்சி அகலுவதில்லை. அந்த கால அளவுக்குள் அதன் தொடர்ச்சியுடைய அடுத்த படத்தை கொண்டு வந்தால் அதை உங்கள் கண்கள் அதை மற்றொரு படமாக பார்க்காமல் அதை முதல் படத்தின் தொடர்ச்சியாகவே பார்க்கிறது.

எனவே, ஒரு நொடியில் குறைந்தபட்சம் 10 தொடர்ச்சியான படங்களை  நம் விழிகளுக்கு காட்சி அளிக்கச்செய்தால், அவற்றை நம் கண்கள் தனித்தனிபடங்களாக இல்லாமல்,  ஒரு அசையும்  (Animation) படமாக ஏற்றுக்கொள்கிறது. இந்த டெக்னிக்கை கொண்டு திரைப்படம் என்ற மாயை உருவாக்கப்படுறது. இதையே   FPS (Frame per second) என்று தொழில்நுட்பபாஷையில் அழைக்கினறனர். ஒரு நொடிக்கு 10 பிரேம்களுக்கு குறைவாக இருப்பின் காட்சி சீரற்றதாகவும் அதிகமானால் தெளிவில்லாமலும் தெரிகிறது.

உதாரணமாக சீலிங் ஃபேன் சுற்றும் போது காணும் காட்சி. மூன்று அல்லது நான்கு இறக்கைகள் உடைய சீலிங்ஃபேன் சுற்றும் போது ஒரு தட்டு போல் காட்சி அளிப்பதை காண்கிறோம். அது தெளிவில்லாமல் தெரிய காரணம் அது நாம் மேலே குறிப்பிட்ட ஒரு நொடிக்கு 10 பிரேம்களை விட அதிமாக இருப்பது காரணம்.

நாம் சிறு வயதில் சிறிய அட்டையில் ஒரு பக்கம் கிளி மற்றொரு பக்கம் கூண்டையும் வரைந்து அதை ஒரு குச்சியில் சொருகி இரண்டு உள்ளங்கைகளுக்கும் இடையில் வைத்து சுற்றும் போது கிளி கூண்டுக்குள் இருப்பது போல் தோற்றமளிப்பது இதன் அடிப்படையில்தான்.

மேலே இருக்கும் டைனோசரஸ் அனிமேஷன் படத்தின் தனித்தனி  படத்தை கீழே காணுங்கள்;

dino18

படங்கள் உதவி:http://vuweb.net/htmlzone/otter/aniframes.html

Advertisements

One Comment Add yours

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s