இந்தியா வல்லரசு நாடாகுமா ?

indiaஅடுத்த வல்லரசு நாடு இந்தியாதான் ! இந்தியா அறிவியல் முன்னேற்றத்தில் எங்கோ சென்றுவிட்டது  என்ற கோஷங்களை சொல்லி சாதாரண மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கும் நிகழ்வே நம் நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தற்போதைய நாட்டின் நிலவரத்தை சிறிதளவு கூர்ந்து கவனித்து சிந்தித்தோமானால் இவை எவ்வளவு நகைப்புற்குரிய கோஷங்கள் என்று ஒரு சாமான்யனாலேயே புரிந்து கொள்ள முடியும்.

ஒரு நாட்டின் உண்மையான முன்னேற்றம் அதன் அறிவியல் கண்டுபிடிப்பிகளிலும், அறிவியல் வளர்ச்சியிலும் அடங்கியுள்ளது. அமெரிக்கா தனது அபரீதமான அறிவியல் வளர்ச்சியை கொண்டு போர் தளவாடங்களையும் போர்  விமானங்களையும் கண்டுபிடித்து வைத்துத்தான் உலகை மிரட்டிக்கொண்டிருக்கிறது. ஜப்பானும் சைனாவும் மின்னனுப் பொருட்களில் புரட்சி செய்து உலகம் முழுவதும் தமது பொருட்களை வாங்க வைத்துக்கொண்டிருக்கின்றன.

நம் நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது ?

2005ஆம் ஆண்டு  NCAER (National Council of Applied Economic Research) என்ற  இந்திய அரசு நிறுவனம் நம் நாட்டின் அறிவியல் நிலையை ஆராய, முதன் முதலாக  அறிவியல் சர்வே ஒன்றை நடத்தியது. அது நமது நாட்டு மக்களின் அறிவியல் விழிப்புணர்வு,நாட்டின் அறிவியல் கல்வியின் நிலை, மாணவர்களின் அறிவியல் ஈடுபாடு போன்றவற்றின் மீது  நாடெங்கிலும் சர்வே எடுத்த்து. சர்வேயின் முடிவில் வெளியிட்ட கருத்துக்களில் பின் வரும் கருத்து மிக முக்கியமானதாகும்.

“ நமது மாணவர்கள் அறிவியலை சுத்தமாக வெறுத்து ஒதுக்கும் நிலை வருவதற்கு முன், நமது இந்தியப் பள்ளிகளின் அறிவியல் பாடங்களை போதிக்கும் முறையை முற்றிலும் சீரமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டியது தலையாய கடமையாகும்.

(முழு அறிக்கை “http://www.insaindia.org/India%20Science%20report-Main.pdf”ல் காணலாம்)

இதன் சாராம்சத்தை நமது பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தனது ராஜ்ய சபா உறையில் பின் வருமாறு குறிப்பிட்டார்.

“ நம் நாட்டின் கல்வி முறையில் விரிவான மாற்றம் தேவைப்படுகிறது. முக்கியமாக அறிவியல் மற்றும் கணக்கு போதிக்கும் முறையில் புதிய பார்வை, சீரிய நோக்கு தேவைப்படுகிறது. மேலும் அறிவியல் துறையில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் திருப்தி அளிக்கும் விதத்தில் இல்லை என்பதும் சிந்திக்க கூடியதாகும்.

(முழு அறிக்கை “http://pmindia.nic.in/speech/content.asp?id=83” ல் காணலாம்)

இதைத்தொடர்ந்து பலவித திட்டங்கள், அறியியல் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு சலுகைகள் போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அவை சரியான முறையில் செயல்படுத்த்ப் படுகின்றனவா ? அவற்றால் பயன் தெரிகிறதா என்பது ஒரு தனி சப்ஜெக்ட்.  முதலில் அறிவியல் வளர்ச்சியில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை அலசிப்பார்ப்பது நமது எதிர்கால சந்ததியினருக்கு மிக உதவியாக இருக்கும். ( மத்திய மாநில அரசுகள் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் அறிவியல் மேம்பட்டு திட்டங்கள் பற்றி அறிய http://www.tanscst.org இன்ணைய தளத்தை பார்வையிடவும்}

நிலைமை இப்படி இருக்கையில் பின் ஏன் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியா அதீத சக்தியாக உருவாகி வருகிறது. என்று அறிக்கை விட்டு வருகின்றன  !?

பிற நாடுகளுக்கு நம் நாட்டுடன் வியாபார ஒப்பந்தமோ அல்லது நமது ஒத்துழைப்போ தேவைப்படும் போது இவ்விதமான பாராட்டுக்களை நாம் கேட்க நேரிடும்.  ஒரு தனி நபரை எப்படி ஒரு பொய் புகழ்சியின் மூலம் ஏமாற்றி தனது காரியங்களை சாதித்துக்கொள்ள முடியுமோ அதைப்போல் ஒரு நாட்டையும் பிற நாடுகள் ஏமாற்ற முடியும் என்பதற்கு நமது நாடு ஒரு நல்ல உதாரணம்.சமீபத்தில் நரபலி மோடி பற்றி அமெரிக்க நிறுவனம் அளித்த சான்று இதற்கு மிக தெளிவான உதாரணமாகும்.

நூறு கோடிக்கும் அதிகமான நம் நாட்டின் மக்கள் தொகை, வளர்ந்த நாடுகளின் கண்களுக்கு அள்ள அள்ள குறையாத தங்க புதையலாக  காட்சியளிக்கிறது. தமது நாட்டின் உற்பத்திகளை விற்பனை செய்யும் மிகப் பெரிய சந்தையாக நமது நாடு மாற்றப்பட்டிருக்கிறது. அதற்கு நன்றிக்கடனாகவோ அல்லது இவர்களும் புதிய கண்டுபிடுப்புகளில் இறங்கிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தினாலோ !? அவ்வப்போது ”இந்தியா மிகப்பெரும் சக்தியாக உருவெடுக்கிறது “ போன்ற அறிக்கைகளை அவ்வப்போது விட்டுக்கொண்டிருப்பார்கள்.

இன்று நம் கைகளில் தவழ்ந்து கொண்டிருக்கும் மொபைல் போன்களை மட்டும் எடுத்துக்கொண்டால் ட்ராயின் கணக்குப்படி கடந்த ஏப்ரல் 2011 வரை சுமார் 62 கோடி உபயோகிப்பாளர்கள் உள்ளதாகவும்; கடந்த ஜூலை 2011 வரை தனியார் அறிக்கையின்படி சுமார் 85 கோடி பயனாளிகள் உள்ளதாகவும் புள்ளி விபரம் கூறுகிறது. (ஆதாரம் http://www.deccanherald.com/content/174409/indias-mobile-subscriber-base-crosses.html)

பயனாளிக்கு ஒரு மொபைல் மட்டும் என்று கணக்கில் எடுத்துக்கொண்டால் இதுவரை குறைந்தபட்சம் 85 கோடி வெளிநாட்டு மொபைல் போன்கள் நம் நாட்டில் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. ( 2010 ஆம் ஆண்டு கணக்கில் வந்த மொபைல் போன்கள் விற்பனை மட்டும் சுமார் 14 கோடி) ஒரு மொபைல் போன் குறைந்தபட்சம் ரூபாய் இரண்டாயிரம் என்று வைத்துக்கொண்டால் மொத்த மதிப்பு சுமார் ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கோடி. இத்தொகை வெறும் செல் போனுக்கு மட்டுமே. செல்போன்  சார்ந்த  இதர பொருட்கள் விற்பனை, செல்போனின் அண்ணனான கம்ப்யூட்டர் மற்றும் அது சார்ந்த பொருட்கள், பிற எலெக்ட்ரானிக் பொருட்களை சேர்த்தால் இன்னும் எத்தனை இலட்சம் கோடிகளோ… இதில் வியப்பளிக்கக்கூடிய அல்லது வருத்தப்படக்கூடிய விஷயமென்னவென்றால், இத்தயாரிப்புகளின் துணை பொருட்களான ஹெட்போன், கார்ட் ரீடர், மவுஸ், கீ போர்ட் போன்றவை கூட இறக்குமதியே !?.

(ஒரு சில இந்திய கம்பெனிகள் கம்ப்யூட்டர், செல்போன்கள் தயாரிப்பதாக கூறிக்கொண்டாலும்; ஒன்று இவர்களின் பெயரில் வெளிநாட்டில் இருந்து தயாரித்து வாங்கி இங்கு சந்தைப்படுத்துவார்கள் அல்லது மூலப்பொருட்களை வெளிநாட்டில் இருந்து வரவழைத்து இங்கு ஒன்றினைப்பார்கள்.)

இத்தனை இலட்சம் கோடிகள் அவர்களுடைய பொருட்களை வாங்கும் நமக்கு போகிற போக்கில் நாலு நல்ல வார்த்தைகளை அவ்வப்பொது சொல்லுவிட்டு போகிறார்கள் அவ்வள்வுதான்.

நாம் இங்கு குறிப்பிட்டு இருப்பவை சில பொருட்கள் மட்டுமே இன்னும் எத்தனையோ துறைகளில் நமது பணம் வெளிநாடுகளை வாழ வைக்கிறது. இதண் காரணமாக நமது நாட்டின் பண மதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. ஏதோ நம் வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் புண்ணியத்தாலும், ஏற்றுமதியால் வரும் அந்நியச்செலவானியாலும் இந்த பாதிப்பு ஓரளவு சமன் செய்யப்பட்டு வருகிறது.இல்லையெனில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்.

இப்பொருட்களை வாங்குவதோ, உபயோகிப்பதோ தவறு என்பதல்ல நமது வாதம்; இப்பொருட்களை நம்மால் ஏன் தாயரிக்க முடிவதில்லை ? ஒரு வேளை தயாரித்தாலும் தரத்திலும், விலையிலும் ஏன் அவர்களுடன் போட்டியிட முடியவில்லை ?  குட்டி குட்டி நாடுகளான தைவான், கொரியா போன்ற நாடுகள் கூட இவற்றை தயாரித்து உலகளவில் ஏற்றுமதி செய்யும் போது, உலகின் மக்கள் தொகையில் இரண்டாவது இடத்திலும், அதிகமான இளைஞர்களையும், இயற்கை வளங்களையும், வருடத்தில் 365 நாட்களிலும் வேலை செய்யக்கூடிய சீதோஷ்ன நிலையையும் கொண்ட  நம்மால் ஏன் முடியவில்லை ? கம்ப்யூட்டர், செல்போன் போன்றவற்றை விட்டுத்தள்ளுங்கள் ஒரு மவுஸ்  அல்லது ஒரு கார்ட் ரீடரை கூடவா தயாரிக்க இயலவில்லை !?

காரணம் என்ன ? அரசியல் ? பொருளாதாரம் ? மனித வளம் ? சட்ட திட்டங்கள் ?

இவற்றையெல்லாம் விட அடிப்படை காரணம் ஒன்று உள்ளது அது நமது கல்வி முறை, அதிலும் முக்கியமாக அறிவியல் கல்வி போதனை முறைகளில் மாற்றம் மற்றும் கல்வியை தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒழிக்கும் வரை இந்தியாவின் வல்லரசுக் கனவு கனவாக வே இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்தாகும். 

Related Articles:

இந்தியாவின் அறிவியல் கல்வி பற்றி பாரத பிரதமர்

INDIA and the Scientific Invention and Discoveries:

அறிவியல் கண்டுபிடிப்புகள்

Image courtesy:http://webmalayalee.com

Advertisements

One Comment Add yours

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s