பேப்பர் வளைய மேஜிக்

paperringsவெளியில் வெயில் கடுமையாக வறுத்தெடுத்துக்கொண்டிருந்த மதிய நேரம்,மின்சாரம் தடையாகிப்போன காரணத்தினால் தூங்கவும் இயலவில்லை. பழைய செய்தித்தாள்களை ஒழுங்காக அடுக்கி வைப்போம் என்று ஆரம்பித்த போது என் சிறுவயதில் என் மாமா என்னிடம் செய்து காட்டிய பேப்பர் வளைய மேஜிக் ஞாபகத்திற்க்கு வந்தது.

இதோ அந்த  பேப்பர் வளைய மேஜிக்:

paperribbon1

பேப்பர் வளையம் தாயாரித்தல்

செய்தி தாளில் வெட்டி எடுத்த நீளமான பேப்பர் நாடாவின் இரு முனைகளையும் பசையால் சேர்த்து ஒட்டி தயாரித்த  பேப்பர் வளையம் ஒன்றை என் மாமா என்னிடம் கொடுத்து “இந்த பேப்பர் வளையத்தின் வெளிப்பக்கத்தின் நடுவில் நீளவாக்கில் குறுக்கு ஒரு கோடு ஒன்று வரைந்து தா” என்றார்.paperribbon2

”ஞாபகம் இருக்கட்டும் வெளிப்பக்கம் மட்டும்தான் கோடு இருக்க வேண்டும்” என்று எச்சரித்து எழுதுகோலையும் அந்த பேப்பர் வளையத்தையும் தந்தார்.

நானும்  அந்த பேப்பர் வளையத்தை ஒரு அட்டை மேல் வைத்து மிக கவனமாக சிறிது சிறிதாக நகற்றி கோடு போட ஆரம்பித்து வளையத்தை சுற்றி மீண்டும் நான் ஆரம்பித்த  இடத்திற்க்கே வந்து கோட்டை நிறைவு செய்தேன்.

ஏதோ சாதித்து விட்ட பெருமிதத்தோடு “ இந்தாங்க மாமா போட்டுட்டேன்” என்று நீட்டினேன்.

paperribbon3

இருபக்கங்களிலும் கோடு எப்படி வந்தது ?

வாங்கி பார்த்த மாமா அதிர்ந்தவராய் “என்னடா , வெளிப்பக்கம் மட்டும் கோடு போடச்சொன்னா, ரெண்டு பக்கமும் போட்டு வச்சிருக்க” ? என்றார்.

ஆச்சர்யமுற்றவனாய் அதை வாங்கிப்பார்த்த நானும் அதிர்ந்துதான் போனேன். ‘இது எப்படி நாம் ஒரு பக்கம் தானே கோடு போட்டோம் எப்படி இருபக்கமும் கோடு வந்தது ‘?

“ நா ஒரு பக்கந்தா மாமா கோடு போட்டேன், ரெண்டு பக்கம் எப்டி வந்துச்சுன்னு தெரியலயே ! சரி  வேறே ஒண்ணு தாங்க கரெக்டா போட்டு தர்ரேன்” என்று கேட்டவுடன், தயாராக இருந்த மற்றொரு வளையத்தை எடுத்து நீட்டினார் மாமா.

இம்முறை மிக்க கவனமாக கோடிட ஆரம்பித்து முடித்துவிட்டு மாமாவிற்க்கு கொடுக்குமுன் நானே ஒருமுறை சோதித்து பார்த்தேன். என்ன ஆச்சரியம் ! மீண்டும் அதேபோல் கோடு இருபக்கமும் வந்திருந்தது.

மாமா ஏதோ தந்திரம் செய்கிறார் என்ற எண்ணத்துடன் அதைக்கொடுத்தவுடன் “ என்ன இப்பவும் அப்படித்தான் வந்திருக்கிறதா ? என்று கேட்டபடி சரி அதுதான் முடியவில்லை இதையாவது செய்ய முடிகிறதா ? என்று கூறியவராக” ஒரு கத்தரிகோலை நீட்டி “ நீ கோடு போட்ட அந்த வளையத்தை அந்த கோட்டிலேயே கத்தரிக்கோலைக் கொண்டு வெட்டினால் என்னவாகும்? ” என்று கேட்டார்.

paperribbon6

paperribbon4

இரண்டாக வெட்டி..

ஒரு காகித வளையத்தை மையத்தில் நீள் பக்கமாக  வெட்டினால் என்னவாகும் ?

“இரண்டு வளையங்களாகும்” என்றேன் சட்டென்று.

”சரி முயற்ச்சி செய்” என்றார்.

மீண்டும் கருமமே கண்ணாக கத்தரியை கொண்டு கவனமாக வெட்ட ஆரம்பித்தேன்.என்ன ஆச்சரியம்!  இரண்டு வளையங்கள் ஆவதற்க்கு பதிலாக ஒரு பெரிய வளையமாக மாறியிருந்தது அந்த காகித வளையம்.

paperribbon7

இரண்டு தனித்தனி வளையங்களுக்கு பதிலாக பெரிய வளையமாக..

”என்ன ? இரண்டு வளையங்கள் ஆக்குவதற்க்கு பதிலாக ஒரு பெரிய வளையமாக மாற்றிவிட்டாய் ?” என்று சிரித்துக்கொண்டே கேட்டார் மாமா.

”போங்க மாமா ! நீங்க ஏதோ மேஜிக் பண்றீங்க ! எங்க அந்த வளையத்தை என் முன்னாலேயே செய்து கொடுங்கள் பார்க்கலாம்” என்றேன்.

சரி இந்தா, பார்த்துகொள் என்றவராக என் முன்னால் காகித ரிப்பன்களை வெட்டி, முனைகளை இணைத்து வளையமாக மாற்றி என் கையில் கொடுத்து இப்போது முயற்சி செய் என்றார்.

இம்முறை வெட்டிமுடித்தவுடன் பார்க்கும் போது இம்முறை;இரண்டு வளையமாக மாறி இருந்தது ஆனால், தனிதனியாக வராமல் ஒன்றுக்குள் ஒன்று சங்கில் போல் பின்னிக்கொண்டு இருந்தது !

paperribbon8

இரண்டு தனித்தனி வளையங்களுக்கு பதிலாக சங்கிலி போல் கோர்த்துக்கொண்டு..

மாமா அதைபார்த்து சிரித்துக்கொண்டே சொன்னார் ” இது மேஜிக் இல்லை ஃபிஸிக்ஸ் (physics) என்றார். பிறகு என்னை அருகில் அமர்த்திக்கொண்டு அதண் ரகசியத்தை விளக்கினார்.

இதோ அந்த இரகசியம் !

paperribbon9

ஒன்று அல்லது இரண்டு முறை திருகி  (Twist) முனைகளை ஒட்டுவதுதான் இதன் இரகசியம்.

பேப்பர் நாடாவை வளையமாக மாற்ற ஒட்டும்போது நேராக ஒற்றாமல் ஒருமுறை திருகி (Twist)ஒட்டினால் கோடு போடும்போது இருபக்கமும் கோடுகள் வந்துவிடும்; இரண்டாக வெட்டினால் இரண்டு துண்டாக மாறுவதற்க்கு பதிலாக ஒரே பெரிய வளையமாக மாரிவிடும்.

இரு முறை திருகி  (Twist) ஒட்டி இரண்டாக வெட்டினால் இரு வளையங்களாக வரும் ஆனால் ஒன்றுடன் ஒன்று சங்கிலி போல் பிணைந்து இருக்கும்.

Source: மூல ஆதாரம் ‘ Fun with physics and Maths’ by  Yakov Perelman, Mir Publication, Mascow.

இது எனது வெற்றிகரமான ஐம்பதாவது இடுகையாகும். எல்லாப்புகழும் இறைவனுக்கே !

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s