ஆளில்லா மின் ஆய்வி !

290px-Voyager

This photo of the Image:GPN-2000-001978.jpg is...

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசாவிண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 ஆம் ஆண்டில் சூரியக் குடும்பம் மற்றும் விண்மீன்களிடை ஊடகம் ஆகியவற்றை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணாய்வி ஆகும். 722 கிலோகிராம் எடையுள்ள இந்த விண்கலம் இன்று வரை 35 ஆண்டுகள் and 7 மாதங்கள் ஐ விண்வெளியில் பூர்த்தி செய்துள்ளது. 2012 பெப்ரவரியில் இவ்விண்கலம் 120 வானியல் அலகு (1.8×1010 கிமீ) தூரத்தில் சென்று கொண்டிருந்தது[2]. இதுவே பூமியில் இருந்து மிக அதிக தூரத்திற்குச் சென்ற மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு பொருள். இது தற்போது சூரியன்சூழ் வான்மண்டலத்தின் வெளிப்புறக் கடைசி அடுக்கில் உள்ளது. சூரியக் குடும்பத்தை விட்டு வெளியேறிச் செல்லவிருக்கும் முதலாவது விண்கலமாகவும் இது இருக்கும்.

வரலாறு

1960களில், வெளிக்கோள்களை ஆராயும் திட்டத்தை முன்னெடுக்க முன்மொழியப்பட்டது. இதற்கான முன்னெடுப்புகளை நாசா 1970களின் முற்பகுதியில் ஆரம்பித்தது. ஆரம்பத்தில் வொயேஜர் 1 விண்ணாய்வி மரைனர் திட்டத்தின் கீழ் மரைனர் 11 என்ற பெயரில் வியாழன், சனி, யுரேனசு, மற்றும் நெப்டியூன் ஆகிய பெரும் வாயுக் கோள்களை ஆராய்வதற்காக அனுப்பபடவிருந்தது. ஆனாலும், நிதிப்பற்றாக்குறை காரணமாக, இது வியாழன், மற்றும் சனிக் கோள்களை மட்டும் அணுகும் திட்டமாக மட்டுப்படுத்தப்பட்டு, மரைனர் வியாழன்-சனி ஆய்வி எனப் பெயரிடப்பட்டது. பின்னர் இத்திட்டம் பழைய மரைனர் திட்டக் கலங்களிலும் பார்க்க பெருமளவு மாற்றங்களைப் பெற்றதால் வொயேஜர் எனப் பெயர் மாற்றம் பெற்றது

விண்கலத்தின் அமைப்பு

வொயேஜர் 1 விண்ணாய்வி ஐக்கிய அமெரிக்காவின் ஜெட் இயக்க ஆய்வகத்தினால் அமைக்கப்பட்டது. இதன் வானலை வாங்கி எப்போதும் பூமியை நோக்கி இருக்கத்தக்கதாக இந்த விண்கலத்தில் 16 ஐதரசீன் அமுக்கிகள், மூவச்சு நிலைபேறு சுழல் காட்டிகள், மற்றும் சூரிய உணர்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் விண்வெளியில் இது பயணிக்கும் போது எதிர்ப்படும் விண்பொருட்களை ஆய்வு செய்வதற்காக 11 அறிவியல் உபகரணங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

வொயேஜர் 1 இன் வானொலித் தொலைத்தொடர்பு அமைப்புகள் இந்த விண்ணாய்வியின் மிகப்பெரும் தூரத்துக்கு விண்வெளிப் பறப்பை மேற்கொண்டு செல்லும் போது சூரியக் குடும்பத்துக்கு அப்பாலும் பயன்படுத்தப்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இத்தொலைத் தொடர்பு அமைப்புகள் பூமியில் உள்ள மூன்று புறவெளித் தொடர்பு நிலையங்களினூடாக வானொலி அலைகளை அனுப்புவதற்கும், பெறுவதற்குமாக 3.7 மீட்டர் விட்டம் கொண்ட பரவளைவு வட்டு உயரீட்ட அலையுணரியைக் (படத்தைப் பார்க்க) கொண்டுள்ளது.

வொயேஜர் 1 வெப்பமின்னியக்கி

வொயேஜர் 1 விண்ணாய்வி பூமியுடன் நேரடியான தொடர்புகளை இழக்க நேரும் போது இவ்வாய்வியில் பொருத்தப்பட்டுள்ள எண்ணிம நாடாப் பதிவி (DTR) மூலம் 62,500 கிலோபைட்டுகள் தகவல்களைப் பதிய முடியும். இத்தகவல்கள் பின்னர் பூமியுடன் தொடர்பு ஏற்படுத்தப்படும் போது பூமிக்கு அனுப்பப்படும்[5]. வொயேஜர் 1 இலிருந்து தகவல் ஒன்றை பூமிக்கு அனுப்புவதற்கு, அல்லது பூமியில் இருந்து அதற்கு அனுப்புவதற்கான நேரம் t = D/c, என்ற இலகுவான சமன்பாட்டினால் கணிக்கப்படும், இங்கு, D என்பது பூமிக்கும் விண்கலத்திற்கும் இடையேயான நேர்கோட்டுத் தூரம், c, ஒளியின் வேகம் (கிட்டத்தட்ட 300,000 கிமீ/செ).

வொயேஜர் 1 மூன்று பெரும் கதிரியக்க சமபொருண்மை வெப்பமின்னியற்றிகளைக் (radioisotope thermoelectric generators, RTGs) கொண்டுள்ளது. இந்த மின்னியற்றிகள் ஒவ்வொன்றும் 24 அழுத்திய புளூட்டோனியம்-238 ஒக்சைடு கோளங்களைக் கொண்டுள்ளது. விண்கலம் ஏவப்பட்ட போது இந்த கோளங்களில் வெளிவிடப்பட்ட வெப்பம் 157 வாட்டுகள் மின்திறனை உருவாக்கியது, மீதமானவை கழிவெப்பமாக வெளியேற்றப்பட்டன. இதனால் மூன்று மின்னியற்றிகளிலும் இருந்து மொத்தம் 470 வாட்டுகள் மின்திறன் பிறப்பிக்கப்பட்டது. இந்த மின்திறனைக் கொண்டு 2025 ஆம் ஆண்டு வரையில் வொயேஜர் 1 விண்கலத்தை இயக்க வைக்க முடியும்.[5][6] (பார்க்க: படம் 1, 2)

இந்த விண்கலங்கள் மற்றைய கோள்களில் உள்ள அறிவுஜீவிகளினால் கைப்பற்றப்பட்டால் முன்னெச்செரிக்கையாக இவை பொற்தகட்டினால் ஆன ஒலி-ஒளி குறுவட்டு ஒன்றைக் கொண்டு செல்கின்றன. இவற்றில் பூமி மற்றும் அதன் உயிரினங்கள் குறித்த படங்கள், அறிவியல் செய்திகள், புகழ்பெற்ற நபர்களின் (எ.கா. ஐநா பொதுச் செயலர், அமெரிக்க அரசுத்தலைவர், மற்றும் சிறுவர்களின்) வாழ்த்துச் செய்திகள், பூமியின் உயிரினங்களின் ஒலிகள் போன்றவை பதியப்பட்டுள்ளன.

செய்தி&புகைப்படங்கள்:விக்கிபீடியா தமிழ்

இது குறித்து மேலும் தமிழில் விளக்கமான செய்திகளுக்கு பாருங்கள் விக்கிபீடியா- தமிழ்

ஆங்கிலம் மற்றும் புகைப்படங்களுக்கு: http://voyager.jpl.nasa.gov/

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s