பாட்டில் மூடி சவால்!

bottle cap on water

நண்பரின் வீட்டில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது,அருகில் விளையாடிக் கொண்டிருந்த நண்பரின் மகன் குளிர்பான பாட்டிலின் மூடியை நான் பாதி தண்ணீரை குடித்து விட்டு வைத்திருந்த கண்ணாடி கிளாசில் போட்டுவிட்டான். விழுந்த மூடி கிளாசின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டு மிதந்து கொண்டிருந்தது.அதை விரலை விட்டு எடுக்க முயற்ச்சித்த போது கிளாசின் நடுவுக்கு வந்த மூடி கை சற்று விலகியதும்  மீண்டும்  கிளாசின் ஓரத்துக்கு மிதந்து சென்றது. சிறுவர்களுக்கே உரிய ஆர்வத்தால் அவன் அதை மீண்டும் மீண்டும் செய்த போது அது விடாப்பிடியாக ஓரத்தில் தான் நிற்பேன் என்று சொல்லாமல் சொல்லியது.

இதைக்கவனித்துக் கொண்டிருந்த நாங்கள், எங்கள் பேச்சை விட்டு விட்டு நாங்களும் சேர்ந்து முயற்சி செய்ய ஆரம்பித்தோம்.  மூடியில் சிறிது அரிசியை போட்டு எடையை அதிகமாக்கி முயற்ச்சி செய்தோம். ஊஹும்.. எதற்க்கும் மசியவில்லை அந்த பிடிவாதககார மூடி.

பலவிதமான கூட்டு முயற்ச்சிக்கு பின் ஒருவழியாக அதை கிளாசின் மையப்பகுதியில் நிற்க வைத்தோம்.

நீங்களும் முயற்ச்சி செய்யுங்களேன்.. முயற்ச்சியில் வெற்றி பெற்றவர்கள்,பெற முயற்ச்சித்தவர்கள் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நீங்கள் கண்டுபிடித்த வழி வேறு விதமாக இருக்கலாம் !

”இதெல்லாம் எங்களால முடியாது முடிவ மட்டும் சொல் “ என்பவர்கள் அடுத்த வாரம் இதே பதிவை பார்க்கவும்.

அதெல்லாம் முடியாது எங்களுக்கு இப்பவே முடிவு தெரிந்தாக வேண்டும் என்பவர்கள்   Ans384 என்று டைப் செய்து 9944835056 SMS  செய்தால் உடனே பதில் வரும்.

Advertisements

6 thoughts on “பாட்டில் மூடி சவால்!

    • சரியான பதில். ஒரு ஷொட்டு ஷொட்டிக்கோங்கோ ! ( எப்டி கண்டுபுடிச்சீங்க !) அப்படி நிகழ்வதற்கான காரணம் தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்களேன் !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s