நடனமாடும் ஐஸ்கட்டி !

ஐஸ் கட்டியை மிதக்கவைப்பது எது ? அது எப்படி நடனமாடும் ? என்பதை இந்த பரிசோதனை மூலம் கண்டறியலாம்.

 தேவையான பொருட்கள்

  • ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி கோப்பை
  •  சிறிதளவு சமையல் எண்ணெய்
  • ஐஸ்கட்டி
  • உணவில் பயன்படுத்தும் வண்ணம் (தேவையானால்)

செய்முறை

  1. கோப்பையில் எண்ணெயை நிரப்பவும்
  2. ஐஸ் கட்டியை எண்ணெயில் போடவும்.ஐஸ் கட்டி கோப்பையின் நடுவில் இருப்பது போல் பார்த்துக் கொள்ளவும். (ஐஸ் கட்டியை உறைய வைக்கும்போது சிறிதளவு உணவில் பயன்படுத்தும் வண்ணத்தை சேர்த்தால் ஐஸ் கலராக இருக்கும். எண்ணெயில் அது நன்கு தெளிவாகவும் பார்க்க கவர்ச்சியாகவும் இருக்கும்
  3. ஐஸ் கட்டி கரையும் நிகழ்வை கவனித்துக்கொண்டே இருக்கவும்.

சிறிது நேரத்தில் ஐஸ் கரைந்து தண்ணீர் துளி உருவாகி எண்ணெய்க்குள் ஊடுருவி செல்லவதை காண்பீர்கள். நீர்த்துளிகள் உருவாகி கீழ்நோக்கி செல்ல செல்ல ஐஸ் கட்டி புரட்டப்படுவதையும், மேலும் கீழும் அசைவது டான்ஸ் ஆடுவது போன்ற தோற்றத்தை தருவதை காணலாம்.

காரணிகள்:

இச்செயல்பாடுகள் அனைத்தும் அடர்த்தியின் (density) காரணமாக நடைபெறுகிறது. ஒரு பொருளின் அடர்த்தி என்பது அப்பொருளின் குறிப்பிட்ட கன அளவின் எடையாகும். உதாரணமாக ஒரு கன மீட்டர் தண்ணீரின் எடை 1000 கிலோவாகும். எனவே அதன் அடர்த்தி 1000kg/m3

ஒரு பொருளை திரவத்தில் இடும்போது பின் வரும் ஆற்றல்களை அது உணர்கின்றது.

கீழ்நோக்கி இழுக்கும் ஈர்ப்பு விசை

மேல் நோக்கித் தள்ளும் அழுத்தம்

 icecubeinoil

Photos courtesy:http://www.abc.net.au

நாம் ஒரு பொருளை நீரில் போட்டவுடன், அப்பொருளின் தன்மைக்கேற்ப நீரை வெளியேற்றுவதை அல்லது அதிகமாவதை காண்கிறோம்.நீரில் இடப்பட்ட பொருள் நீரால் மேல் நோக்கி தள்ளப்படும் விசையின் அளவு,அது வெளியேற்றிய நீரின் எடைக்கு சமமாக இருக்கும். இதுவே நீரின் மேல்நோக்கித்தள்ளும் விசை அல்லது நீரில் மிதக்கும் தன்மை (buoyancy) எனப்படுகிறது.

ஒரு பொருளின் எடையானது அந்த திரவப்பொருள் வெளியேற்றும் திரவ எடைக்கு குறைவாக இருப்பின் அப்பொருள் அத்திரவத்தில் மிதக்கிறது, அந்த் எடை அதிகமானால் அப்பொருள் மூழ்கிவிடுகிறது. மற்றொரு முறையில் சொல்லுவதானால், ஒரு பொருளின் அடர்த்தி அத்திரவத்தின் அடர்த்தியை விட குறைவானதானால் அப்பொருள் மிதக்கிறது, அடர்த்தி அதிகமாக இருப்பின் அப்பொருள் மூழ்கிவிடுகிறது. இதே விதிமுறை திரவங்களுக்கும் பொருந்தும். தண்ணீரின் அடர்த்தி எண்ணெயின் அடர்த்தியை விட அதிமாக இருப்பதால் நீரின் மேல் எண்ணெய் மிதக்கிறது.

தண்ணீர் ஒரு விந்தையான ஆச்சரியமான திரவமாகும். நமக்கு  சர்வ சாதாரணமாக கிடைப்பதாலும், அன்றாடம் உபயோகிப்பதாலும் அதை நாம் கண்டுகொள்வதில்லை. ஒரு விந்தையான செய்தி என்னவென்றால், நீரின் அடர்த்தி அதன் திரவ நிலையை விட திட நிலையில் குறைவாக இருப்பதாகும்.

ஐஸ் கட்டியும் சமையல் எண்ணெயும் ஏறக்குறைய ஒரே அடர்த்தியை கொண்டதாகும்.சுமார் 920kg/m3, எனவே ஒரு ஐஸ் கட்டியை எண்ணெயின் மீதிட்டபின் அதண் அசைவு மிக்குறைவாகவே இருக்கிறது. ஐஸ் உருகி தண்ணீராக மாறியவுடன் அதண் அடர்த்தி கூடுகிறது. உருகிய தண்ணீர் கீழே விழுவதற்கு முன் சிறிது நேர ஐஸ் கட்டியுடன் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. நீர்த்துளிகள் சேர்ந்து ஐஸ்கட்டியின் எடை அதிகமானவுடன் நீரில் மூழ்க ஆரம்பிக்கிறது. இன்னும் சில நீர்த்துளிகள் சேர்ந்து எடைகூடியவுடம் நீர்த்துளி பிரிந்து எண்ணெயில் ஊடுருவி கோப்பையின் அடிப்பாத்தை வந்தடைகிறது. நீர்த்துளிகள் பிரிந்து ஐஸ் கட்டியுன் எடை குறைய ஆரம்பிப்பதால் அது மீண்டும் எண்ணெயின் மேற்பரப்புக்கு வந்து மிதக்க ஆரம்பிக்கிறது. மீண்டும் நீர்த்துளிகள் சேர ஆரம்பிக்க பழைய படலம் தொடர்கிறது. இத்தொடர் நிகழ்வால் ஐஸ் மேலும் கீழும் அசைவது அது நடனமாடுவது போல் தோற்றமளிக்கிறது.

ஐஸ் அல்லது பனிக்கட்டி நீரைவிட லேசாக இருப்பது இறைவன் தந்த வரமாகும்.குளிர்பிரதேசங்களில் உள்ள நீர்நிலைகள் பனிக்காலங்களில் உறைநிலைக்கு மாறுகிறது. பனிக்கட்டி நீரைவிட லேசாக இருப்பதால் அது நீரின் மேற்ப்பரப்பில் மிதந்து விடுகிறது இல்லாவிட்டால் நீரின் அடிப்பகுதிக்கு சென்று அங்கு வாழும் உயிரினங்களை வாழ்விடமின்றியும் செய்ய நேரிடும்.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s