கடல்களும் ஆழ்கடல்களும்

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் வெளிப்படுத்தப்பட்டவைகள்

SeasOceans_05திருக்குர்ஆன் வழங்கும் அற்புதம் என்றென்றும் நிலைத்திருப்பதாகும். மறுமை நாள் வரை புதுப்புது அற்புதங்களை அது வழங்கிக் கொண்டிருக்கும். பல வகையான மக்களிடையே வித்தியாசமான கலாச்சார நிலைகள் மற்றும் சரித்திர காலங்கள் இருந்த போதிலும் அனைவருக்கும் அது தெரிய வரும். பாலைவனத்தில் இருந்த காட்டரபியும் சரி பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியரும் சரி அவர்கள் திருக்குர்ஆனில் தங்களுக்கு போதுமானதை (-அறிவுகளை) காண்பார்கள்.

தற்போது தங்களுக்கு பேராசிரியர் தோர்ஜா ராவ் அவர்களை அறிமுகப்படுத்துகின்றோம். அவர் கடல் புவியியலில் பேராசிரியர் ஆவார். அவர் தற்போது ஜித்தாவிலுள்ள மன்னர் அப்துல்அஜீஸ் பல்கலைக்கழகத்தில் போதித்து வருகின்றார். நாம் அவரைச் சந்தித்து அறிவியல் அத்தாட்சிகளைக் கூறும் திருக்குர்ஆனின் வசனங்களை நாம் அவருக்கு அளித்தோம். அவர் கண்ட கேட்ட விசயங்களால் பெரிதும் வியப்பிற்க்குள்ளானார். திருக்குர்ஆன் மற்றும் அதன் வசனங்களின் விளக்கங்களை கூறும் புத்தகங்களை அவர் படித்துள்ளார். இந்த அல்லாஹ்வின் வசனங்களில் கீழ் வரும் வசனத்தைப் பற்றி அவர் விவாதித்தார்:

அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டீனால் அவனால் அதைப் பார்க்க முடியாது. எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை. (திருக்குர்ஆன் 24:40)

நீர் மூழ்கிக்கப்பலில் பெருங்கடலின் ஆழத்திற்குள் சென்று இருளை அறிவியலாளர்கள் கண்டுள்ளாhர்கள் என்பதை பேராசிரியர் ராவ் அவர்கள் உறுதி செய்தார். அங்கே மனிதர் (இது போன்ற இயந்திரங்களின்) உதவியில்லாமல் இருபது மீட்டருக்கு மேல் செல்ல முடியாது.

முத்துக்குளிப்பவர்கள் குறைந்த ஆழமுள்ள கடலில்தான் முத்துக் குளிக்கின்றார்கள். இதைவிட ஆழமான கடலில் அவர்கள் முத்துக் குளிக்க முடியாது. பெருங்கடலின் மிகவும் ஆழமான பகுதியில் மனிதர்கள், 200 மீட்டர் போன்ற ஆழப் பகுதியில், உயிர்வாழ்ந்திட முடியாது. ஆனால் இந்த வசனம் மிகவும் ஆழமான பெருங்கடலில் நடக்கும் நிகழ்ச்சியை கூறுகின்றது. அல்லாஹ்வின் வசனமான, ஆழ்கடலில் உள்ள இருள் என்பது சாதாரணமாக எந்தக் கடலையும் குறித்திடவில்லை. ஏனெனில் ஒவ்வொரு கடலிலும் ஒருள் அடுக்குகள் ஒன்றின் மேல் ஒன்றாக சேர்வதில்லை. இந்த அடுக்கடுக்கான இருள் இரு காரணங்களால் ஏற்படுகின்றது. ஒவ்வொரு அடுக்கிலிருந்தும் நிறங்கள் தொடர்ச்சியாக மறைவது முதல் காரணம். ஒளிக்கதிர் ஏழு நிறங்களால் ஆனது. அது நீர்ப்பரப்பின் மேல் விழும் போது அது ஏழு நிறங்களாக சிதறுகின்றது.

ஒளிக்கதிர் பெருங்கடலின் ஆழத்தில் ஊடுருவிச் செல்வதை இப்படத்தில் தாங்கள் காண்கின்றீர்கள். முதல் பத்து மீட்டரிலேயே மேலுள்ள அடுக்கு சிகப்பு நிறத்தை உள்வாங்கி விடுகின்றது. முத்துக் குளிப்பவர் முப்பது மீட்டர் ஆழத்திற்குள் சென்ற பிறகு அவருக்கு காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தோடினால் அந்த இரத்தத்தை அவரால் காண இயலாது. ஏனெனில் சிகப்பு நிறம் இந்த ஆழம் வரை எட்டவில்லை. அது போலவே இப்படத்தில் நாம் காண்பது போன்று, அடுத்தபடியாக ஆரஞ்சு கதிர்கள் உள்வாங்கப்படுகின்றன. பிறகு ஐம்பது மீட்டரில் மஞ்சள் கதிர் உறிஞ்சப்படுகின்றது. நூறு மீட்டர் ஆழத்தில் பச்சைக் கதிர்கள் உள் வாங்கப்படுகின்றது. இருநூறு மீட்டர் ஆழத்தில் ஊதாக்கதிர்கள் உள் வாங்கப்படுகின்றது. பெருங்கடல் போகப் போக இருட்டாகிக் கொண்டே போகின்றது என்பதை நாம் காணலாம். ஒளி அடுக்குகளில் இருள் வந்து சேர்கின்றது. ஒளியை மறைக்கும் தடுப்புக்களின் விளைவாக இருள் ஏற்படுகின்றது என்பது இரண்டாவது காரணமாகும்.

தாங்கள் இங்கே காணும் ஒளிக்கதிர்கள் சூரியனிலிருந்து உருவாகுகின்றது மேகங்களால் உள் வாங்கப்படுகின்றது. அம் மேகங்கள் அந்த ஒளிக்கதிரில் சிலவற்றை சிதறுகின்றது. இதனால் மேகங்களின் கீழ் இருள் அடுக்கு உண்டாகின்றது. இதுதான் இருளின் முதல் அடுக்கு. பிறகு இந்த ஒளிக்கதிர்கள் பெருங்கடலின் மேற்பரப்பை அடையும் போது அவைகளை அலையின் மேற்பரப்பு பிரதிபலித்து அவைகளுக்கு பிரகாசமான தோற்றம் கொடுக்கின்றது. இதனால்தான், அலைகள் இருக்கும் போது, இந்தப் பிரதிபலிப்பின் வேகம் அலைகளின் கோணத்தைப் பொறுத்தே உள்ளது. ஆகவே, இங்கே அலைகள் ஒளியைப் பிரதிபலிக்கின்றன. அதனால் அங்கே இருள் உண்டாக காரணமாகின்றது. பிரதிபலிக்கப்படாத ஒளிக்கதிர்கள் பெருங்கடலின் ஆழத்திற்குள் ஊடுருவிச் செல்கின்றது. இவ்வாறாக, பெருங்கடலில் மேற்புற மற்றும் ஆழ்ந்த பகுதியிலுள்ள என்று இரண்டு வித முக்கிய அடுக்குகளாகப் பிரிக்கலாம். மேற்புற அடுக்கு ஒளி மற்றும் உஷ்ணத்தன்மை கொண்டதாகவும் ஆழ்ந்த பகுதியிலுள்ள அடுக்கு இருள் நிரம்பிய தன்மை கொண்டதாகவும் உள்ளது.

இந்;த இரண்டு வகையான பெருங்கடல்களும் அவைகளின் குணங்கள் மற்றும் தன்மைகளைப் பொறுத்தவரை வித்தியாசப்படுகின்றன. மேற்பகுதியானது ஆழமான பகுதியிலிருந்து அலைகளால் மேலும் பிரிக்கப்படுகின்றது. இந்த உள் அலைகள் 1900ம் வருடம்தான் கண்டுபிடிக்கப்பட்டன. உள் அலைகள் என்று ஒரு வகை அலைகள் உள்ளதாக சமீபத்தில் அறிவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். அவைகள் பல்வேறு வித்தியாசமான அடர்த்தியுள்ள அடுக்குகளுக்கு இடையே இருக்கும் அடர்த்தியான பரப்புக்களின் மேல் உண்டாகின்றன. உள் அலைகள் கடல்களின் ஆழத்தில் இருக்கும் நீர்களையும் பெருங்கடல்களையும் மூடுகின்றன. ஏனெனில் அவைகள் அவைகளுக்கு மேலிருக்கும் நீரை அடர்த்தியில் கூடியவை. உள் அலைகள் மேற்ப்புற அலைகள் போன்று செயல்படுகின்றன. மேற்புற அலைகள் போன்று அவைகளும் உடைந்து விட முடியும். உட்புற அலைகள் சாதாரண மனிதக் கண் கொண்டு பார்க்கப்பட முடியாது. ஆனாலும், குறிப்பிட்ட பகுதியில் உள்ள நீரின் சீதோஷ்ண நிலை அவற்றின் அடர்த்தி மாற்றம் ஆகியவைகளை ஆராய்வதன் அவற்றை கண்டு கொள்ள முடியும்.

பெருங்கடலை இரண்டாகப் பிரிக்கும் இந்த அலைகளுக்குக் கீழே இருள் தொடங்குகின்றது. இந்த ஆழத்தில் உள்ள மீன் பார்க்க முடியாது. அவைகளின் உடல்களில் இருந்து வருவதே வெளிச்சமே அவர்களிடமுள்ள வெளிச்சமாகும். ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ள அல்லது கட்டப்பட்டுள்ள இந்த இருள்தான் திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டு இருளாகும்: ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; ஓர் அலைக்கு மேல் அலை அவைகளை மூடுகிறது. (திருக்குர்ஆன் 24:40)

வேறு வார்த்தைகளில் சொல்வதனால், அந்த அலைகளுக்கு மேலும் மற்றும் பல அடுக்கு அலைகள் உள்ளன. இந்த பிந்தைய அலைகள் பெருங்கடலின் மேற் பரப்பில் காணப்படுகின்றன. அந்த இருளை திருக்குர்ஆன் தெரிவிக்கின்றது: அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (24:40)

ஒன்றிற்கு மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட பல்வேறு நிலைகளில் நிறங்கள் உள் வாங்கப்பட்டதால் ஏற்படும் இருள் தவிர, இந்த இருள் விளக்கிக் கூறப்பட்ட தடுப்புக்களால் உண்டாகின்றன.

திருக்குர்ஆன் தொடர்ந்து சொல்கின்றது: (அப்பொழுது) ஒரு மனிதன் தன் கையை வெளியே நீட்டீனால் அவனால் அதைப் பார்க்க முடியாது! எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை. (திருக்குர்ஆன் 24:40)

இங்கே முழு இருட்டு. நீர் மூழ்கிக்கப்பல்கள் வெளிச்ச ஆதாரங்களை கொண்டு வராமல் பார்க்க முடியாது. ஆகவே நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இதை யார் தெரிவித்திருக்க முடியும்?

பேராசிரியர் ராவ் அவர்கள் நிபுணத்துவம் பெற்ற துறை சம்பந்தமான பல வசனங்களை அவருக்கு அளித்து விட்டு திருக்குர்ஆனில் அறிவியல் தகவல்கள் இருப்பது பற்றி தாங்கள் என்ன நினைக்கின்றீர்கள்|என்று கேட்டோம். பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் நபி முஹம்மது அவர்கள் எவ்வாறு இவைகளை அறிந்திருக்க முடியும்?

பேராசிரியர் ராவ் அவர்கள் பதிலளித்தார்: இந்த மாதிரியான அறிவு 1400 ஆண்டுகளுக்கு முன் இருந்தது என்று கற்பனை செய்து பார்ப்பது மிகவும் கடினம். ஒரு சிலவற்றைப் பற்றி இலேசான கருத்துக்கள் இருந்திருக்கலாம், ஆனால் அந்த விசயங்களை மிகவும் விரிவாக விவரிப்பது மிகவும் கடினமானதாகும். ஆகவே, நிச்சயமாக இது சாதாரண மனித அறிவல்ல. ஒரு சாதாரண மனிதன் இந் நிகழ்ச்சியை பெரும் விளக்கத்துடன் விளக்க முடியாது. ஆகவே, இந்த தகவல்கள் மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு மூலத்திலிருந்துதான் வந்திருக்க முடியும் என்று நான் நம்புகின்றேன்.

ஆமாம். இந்த அறிவின் மூலம் மானிட நிலைக்கு அப்பாற்ப்பட்டதாகத்தான் இருக்க வேண்டும். பேராசிரியர் ராவ் அவர்கள் கூறுவது போன்று இயற்கையிலிருந்து அது வந்திட இயலாது ஆனால் இயற்கைக்கு மிகவும் அப்பாற்பட்ட, மனித சக்திக்கு அப்பாற்பட்ட இடத்திலிருந்துதான் வந்திருக்க வேண்டும். பேராசிரியர் ராவ் அவர்கள் சொல்ல வருவது என்னவெனில், இது இயற்கையான ஒரு மனிதரால் சொல்ல முடியாது என்பதுதான்.

இது (-திருக்குர்ஆன்) வானங்கள் பூமி ஆகியவற்றின் ரகசியங்களை அறிந்த (அல்லாஹ்வாகிய) அவனால் இறக்கப்பட்டுள்ளது என்று கூறுவீராக. (திருக்குர்ஆன் 25:6)

அது அல்லாஹ்விடமிருந்து வந்தது. இவ்வாறாக, இந்த வழிகாட்டும் வேதமும் அதில் அடங்கியுள்ள பேரொளியும் அது உண்மை என்பதற்கான மறுக்கப்பட முடியாத அத்தாட்சியாகும் என்பதை நிரூபிக்கும் வகையில் அறிவியலாளர்களின் சாட்சிகள் ஒன்றன் பின் ஒன்றாக குவிகின்றன. ஏனெனில் திருக்குர்ஆன் இறுதி நாள் வரையான நேர்வழியின் மூலமாகும்.

இது தொடர்பான பிற பதிவுகள்:

கடல்கள் மற்றும் பெருங்கடல்கள் பற்றிய உண்மைகள்

(source: http://www.it-is-truth.org/it-is-truth/IslamAndScience.shtml)

தமிழில்: தமிழ் இஸ்லாம்.காம்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s