பலூனில் இயங்கும் படகு

image001
தேவையான பொருட்கள்:

  • சதுர அல்லது செவ்வக  வடிவிலான பிளாஸ்டிக் டப்பா (ஸ்வீட் அடைத்து வரும் பெட்டிகளை உபயோகித்திக்கொள்ளலாம்.
  • பலூன்
  • குளிர்பானம் குடிக்க பயன்படுத்தும் பெரிய  உறுதியான ஸ்ட்ரா
  • ரப்பர் பேண்ட்
  • ஒட்ட பயன்படும் M Seal  (களிமண் போன்று இரண்டு கலவைகளாக இருக்கும் இவற்றை தேவையான அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து பயன்படுத்த வேண்டும். காய்ந்தவுடன் கெட்டியாகி விடும் பின்பு உபயோகப்படுத்த இயலாது. என்வே தேவையான அளவு மட்டுமே கலந்து கொள்ளவும். உபயோகித்த பின் கைககளை சுத்தமாக கழுவிக்கொள்ளவும். சிரியவர்கள் பெரியவர்களின் துணையோடு இதை செய்யவேண்டும்.)
  • கத்தரிக்கோல்
  • பிளாஸ்டிக் டப்பாவில் ஸ்ட்ரா நுழையும் அளவு ஓட்டை போட ஏதேனும் ஒரு கருவி.

செய்முறை:

– பிளாஸ்டிக் ட்ப்பாவின் ஒரு ஓரத்தின் நடுப்பாகத்தில் ( செவ்வக வடிவமாக இருந்தால் குறுகலான பக்கத்தை பயன்படுத்தவும்) அடிப்பகுதியில் இருந்து சுமார் ஒரு செண்டி மீட்டர் உயரத்தில் ஸ்ட்ரா நுழையும் அளவுக்கு துளையிடவும்.

ஸ்ட்ராவின் ஒரு முனையில் பலூனை மாட்டி ரப்பர் பேண்டை கவனமாக சுற்றவும்.

ஸ்ட்ராவின் மற்றொரு முனையை டப்பாவில் இட்ட துளையின் வழியே செலுத்தி சுமார்  மூன்று செ.மீ. அளவு வெளியில் இருக்குமாறு அமைத்து துளையை சுற்றி இருக்கும் இடைவெளியை எம் சீல் கொண்டு நன்றாக மூடிவிட்டு காயவிடவும்.

காய்ந்த பின்னர் எடுத்து ஸ்ட்ராவின் வெளிமுனை உதவியால்  காற்றை ஊதி பலூனை பெரிதாக்கி, ஸ்ட்ராவின் துளையை விரலால் மூடிக்கொண்டு அகலமான பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் விடவும். படகு ஓரளவு அமுங்குவதற்க்கு சிறிய பருமமான பொருட்களை உள்ளே வைக்கவும்.

தண்ணீரில் படகு உந்திக்கொண்டு செல்லும் காட்சியை கண்டு மகிழுங்கள்

விளக்கம்:

இந்த இயக்கம்  நியூட்டனின் மூன்றாவது விதிக்கு  ஒரு உதாரணமாகும். – ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் மற்றும் சமமான எதிர்வினை உண்டு. காற்று ஸ்ட்ரா வழியாக அழுத்தத்துடன் வெளியேறுவது ஒரு வினை.அதனால் ஏற்படும் எதிவினை காரணமாக  படகு எதிர்திசையில் பயணிக்கிறது.

இந்த படகை இன்னும் மேம்படுத்த என்ன செய்யலாம் ?

Advertisements

One Comment Add yours

  1. Krishna சொல்கிறார்:

    Jet pataku vativel matralam

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s