நீர் மூழ்கி கப்பல் காற்று மற்றும் காற்றின் அழுத்தத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. நீர் மூழ்கி கப்பல் கடலின் மேற்பகுதிக்கு வர அதனுள் உள்ள நீரை காற்றின் அழுத்தத்தின் மூலம் வெளியேற்றிவிடுகிறது.அவ்விடத்தை காற்று நிரப்புவதால் கப்பல் சுலபமாக நீரின் மேற்பகுதிக்கு வருகிறது.
அதைப்போல் கப்பல் நீரின் உள்ளே மூழ்க காற்றை வெளியேற்றி அவ்விடத்தில் நீரை நிரப்ப கப்பலின் எடை அதிகமாகி கப்பல் சுலபமாக நீரினுள் மூழ்க ஆரம்பிக்கிறது.
இதை சுலபமாக புரிந்து கொள்ள பின் வரும் பரிசோதனை உதவும்.
தேவையான பொருள்கள்:
- உயரமான கண்ணாடி பாட்டில் ( பெரிய ஹார்லிக்ஸ் பாட்டில்)
- பழைய பால் பாயிண்ட் பேனா மூடி அல்லது சொட்டுமருந்து டிராப்பர்.
- பெரிய பலூன்
- ரப்பர் பேண்டு அல்லது நூல் கயிறு
செய்முறை:
கண்ணாடி பாட்டிலில் தண்ணீரை நிரப்பி பேனா மூடியில் முக்கால் பாகம் தண்ணீரை நிரப்பி தண்ணீர் கீழே கொட்டாமல் பாட்டிலினுள் மிதக்க விடவும்.
பலூனை பாட்டிலின் வாயின் மேல் இழுத்து வைத்து காற்று போகா வண்ணம் நன்றாக கட்டிவிடவும்
பலூனை ஒருபக்கமாக கத்தரித்து விரித்து பாட்டிலின் வாயை மூடும் அளவுக்கு வெட்டிக்கொள்ளவும்.
இப்போது பாட்டிலின் வாயிலில் கட்டியுள்ள பலூனில் லேசாக விரலை வைத்து அழுத்தவும்.
பேனா மூடி மெதுவாக கீழ் நோக்கி மூழ்குவதை காணலாம். மேலும் நன்றாக அழுத்த மூடி வேகமாக கீழ் நோக்கி சென்று பாட்டிலின் அடியில் ஒட்டிக்கொண்டு நிற்பதை காணலாம்.
அழுத்துவதை நிறுத்திய உடன் மீண்டும் மேல் நோக்கி வருவதை காணலாம்.
குறிப்பு :
மூடி மூழ்காவிடில் மூடியில் உள்ள தண்ணீரின் அளவை கூட்டியும், போட்டவுடன் மூழ்கினால் தண்ணீரை குறைத்தும் முயற்சிக்கவும்