என் கேள்விக்கென்ன பதில் ?

thinkstock-1337821576107_956x500நாம் வாழும் இவ்வுலகில் நம்மை சுற்றி எத்தனையோ அறிவியல் நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. மிகச்சாதரனமாக அன்றாடம் நாம் செய்யும், பார்க்கும் பொருட்களில், நிகழ்வுகளில் பலவித அறிவியல் நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் அவை பற்றி கவனிப்பதோ, சிந்திப்பதோ கிடையாது !?

ஒரு நிகழ்வை, பொருளை பற்றி சிந்திக்க தொடங்கும்போது அதைப்பற்றிய கேள்வி உதிக்கிறது, கேள்வி பதிலை தேட வைக்கிறது. அறிவுத்தேடுதல் வாழ்க்கையை விறுவிறுப்பனதாகவும், நமக்கும் பிறருக்கும் பயனுள்ளதாக ஆக்குகிறது.

இதை பின்வரும் சிறிய உதாரணம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

நாம் அன்றாடம் குளிர்பானமோ, குளிர்வித்த தண்ணீர் உள்ள பாட்டிலை பார்க்கிறோம். நன்கு மூடிய குளிர் பானமோ அல்லது தண்ணீர் பாட்டிலையோ குளிர் சாதன பெட்டியில் இருந்து எடுத்து காய்ந்த துணியால் நன்றாக துடைத்துவிட்டு வெளியில் சிறிது நேரம் வையுங்கள். சில நொடிகளில் அப்பாட்டிலின் வெளிப்பகுதியில் நீர் துளிகள் ஒட்டி இருப்பதை காணலாம்!

அந்த தண்ணீர் எங்கிருந்து வந்தது ?

6533512-green-beer-bottle-with-water-drops-isolated-on-whitewater

விடை அறிந்தவர்கள் பின்வரும் “மறுமொழி இடுங்கள் என்ற கட்டத்தில் ஆங்கிலத்திலோ அல்லது தன்க்ளிஸ் லோ எழுதி அனுப்பலாம்.

இது தொடர்பான பிற பதிவுகள்:

என் கேள்விக்கென்ன பதில் ? -2 

Advertisements

5 Comments Add yours

 1. sakthivelan சொல்கிறார்:

  marumolhi yidungal

 2. A. Syed Mohamood சொல்கிறார்:

  காற்றில் கலந்துள்ள ஈரப்பதம் ( நீராவி ) குளிர்ச்சியாக உள்ள தண்ணீர் பாட்டிலின் மீது பட்டு நீர்த்துளிகளாக மாறுகிறது.

  1. ebrahimsha சொல்கிறார்:

   சரியான பதில் சகோதரரே!
   நம் மக்களின் அறிவியல் அறிவின் நிலையை விளங்க வைக்க இந்த கேள்வியை நன்கு படித்த முக்கியமாக ஆசிரியப்பெருமக்கள், அறிவியல் பட்டதாரிகளிடம் கேட்பது வழக்கம்.சரியான பதிலை சொன்னவர்கள் மிக மிக சொற்பமே.

 3. Amsaraj Amsz சொல்கிறார்:

  காற்றில் கலந்துள்ள ஈரப்பதம் ( நீராவி ) குளிர்ச்சியாக உள்ள தண்ணீர் பாட்டிலின் மீது பட்டு நீர்த்துளிகளாக மாறுகிறது.

  1. ebrahimsha சொல்கிறார்:

   அப்பாடி ! ஒரு வழியாக முதன் முதலாக சரியான பதில் சகோதரரே ! சொன்னால் நம்ப மாட்டீர்கள் அறிவியல் பட்டதாரிகள் கூட சரியான பதிலை சொல்ல முடியாமல் தவித்த தருணங்களை நான் அதிகம் சந்தித்து இருக்கிறேன். வாழ்த்துக்கள் !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s