இந்தியாவின் அறிவியல் துறை பற்றி பிரதமர்

manmohanஅறிவியல் துறையில் இந்தியா கீழ்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பிரதமர்

வாஷிங்டன், பிப். 26: அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் சீனாவை விட இந்தியா பின் தங்கியிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.இந்தியா தொடர்பான சிறப்புச் செய்தித் தொகுப்பை அமெரிக்காவிலிருந்து வெளியாகும் “சயின்ஸ்’ இதழ் வெளியிட்டுள்ளது.

அதில் பிரதமர் மன்மோகன் சிங் அளித்த பேட்டி:÷சீனா பல துறைகளில் இந்தியாவை விட முன்னேறிய நிலையில் உள்ளது.குறிப்பாக அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் இந்தியாவை விஞ்சிவிட்டது சீனா. இந்தத் துறையில் உலக அளவில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவின் நிலை கீழ்நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது எனக்கு மிகுந்த கவலை தரும் விஷயமாக உள்ளது.இந்தியாவும், சீனாவும் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ச்சியடைந்துவரும் நாடுகளாக உள்ளன. இவ்விஷயத்தில் இரு நாடுகளுக்கு இடையேயும் போட்டி நிலவிவரும் அதே சமயத்தில், ஒத்துழைப்பும் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.1960-களில் இரு நாடுகளுக்குமிடையே பிரச்னைகள் இருந்தன. அதிலிருந்து மீண்டு, ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து வருகிறோம் என்றார் பிரதமர்.

வேளாண் ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம்: இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அனுமதிப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் அளித்த பதில்:÷வேளாண் துறையில் விஞ்ஞானிகள் கவனம் செலுத்த வேண்டும். இத்துறையில் வளர்ச்சி ஏற்பட்டால், அது கிராமப்புற மேம்பாட்டை ஊக்குவிப்பதாக அமையும்.மேலும், நீர் மேலாண்மை, சுற்றுப்புறத்தை மாசுபடுத்தாத தொழில்நுட்பத்தை கொண்டு வருதல் உள்ளிட்ட ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றார் பிரதமர் மன்மோகன் சிங்.பிரதமருக்குப் பாராட்டு:÷

இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் தற்போதுள்ள நிலை குறித்து “சயின்ஸ்’ இதழ் வெளியிட்டுள்ள கருத்து:உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, அறிவியல் துறையின் ஊக்கசக்தி என்ற நிலையை விரைவில் அடையும்.பிரதமராக மன்மோகன் சிங் பொறுப்பேற்ற பின், அறிவியல் ஆராய்ச்சித் துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளார்.ஆராய்ச்சிக்குத் தேவையான நவீன வசதிகள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துகிறார்.இப்போது ஆராய்ச்சித் துறையில் ஆண்டுக்கு 300 கோடி அமெரிக்க டாலர்கள் செலவிட்டு வரும் நிலையில், 2017-ம் ஆண்டில் 800 கோடி டாலரை செலவிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மன்மோகன் சிங் சமீபத்தில் அறிவித்துள்ளார்.இது இந்திய விஞ்ஞானிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.வெளிநாடுகளில் பணியாற்றி வரும் இந்திய விஞ்ஞானிகள் பலர், தாய் நாட்டுக்குச் சென்று ஆராய்ச்சியை மேற்கொள்வதில் ஆர்வமாக உள்ளனர் என்று அந்த இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினமனி பிப். 26, 2013.

Related Topics:

India’s new science policy ‘a joke’ (External link)

Advertisements

2 Comments Add yours

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s