யானை பற்பசை

videoscreen_foam1l

தேவையான பொருட்கள் 

ஒரு சுத்தமான 16 அவுன்ஸ் பிளாஸ்டிக் சோடா பாட்டில்
1/2 கப் 20-தொகுதி ஹைட்ரஜன் பெராக்சைடு திரவம்
உலர் ஈஸ்ட் 1 தேக்கரண்டி (ஒரு பாக்கெட்)
வெதுவெதுப்பான நீர 3 தேக்கரண்டி
பாத்திரம் துலக்கும் லிக்விட் சோப்பு,
உணவு வண்ணம்
சிறிய கப்
பாதுகாப்பு கண்ணாடி

செய்முறை:

1. ஹைட்ரஜன் பெராக்சைடு, தோல் மற்றும் கண்களில் பட்டால் எரிச்சல் ஏற்படும் , அதனால் அந்த பாதுகாப்பு கண்ணாடி போட்டு கொள்ள வேண்டும்.குடுவைக்குள் ஹைட்ரஜன் பெராக்சைடு கவனமாக ஊற்ற பெரியவர்களின் உதவியை நாட வேண்டும்.

2. உங்கள் பிடித்த உணவு வண்ணம் 8 சொட்டுக்களை காலி சோடா பாட்டிலில் விடவும்..

3. ஒரு ஸ்பூன் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் லிக்விட் சோப்பை விட்டு பாட்டிலின் பக்கவாட்டில் படும்படி  நன்றாக சுழற்றவும்.

4. ஒரு தனி சிறு கோப்பையில், வெதுவெதுப்பான தண்ணீர் மற்றும் ஈஸ்ட் சேர்த்து 30 நொடிகள் கலக்கவும்.

5. இப்போது சாகசம் தொடங்குகிறது! புனலை பயன்படுத்தி ஈஸ்ட் தண்ணீர் கலந்துள்ள கலவையை பாட்டிலில் ஊற்றவும். அழகாக நுரை பொங்கி எழுந்து பாட்டிலின் வாய் வழியாக வெளியேறுவதை பாரீர்.

இச்செயல் எப்படி நடைபெறுகிறது:

நுரையை காண்பது கண் கொள்ளா காட்சி ! நீங்கள் தயாரித்த நுரை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஒவ்வொரு சிறிய நுரை குமிழியும் ஆக்சிசனால் நிரப்பப்பட்டு இருக்கிறது.ஈஸ்ட் சிறந்த ஊக்கியாக செயல்பட்டு ஹைட்ரஜன் பெராக்சைடில் இருந்து ஆக்சிஜன் வெளியேற்றுகிறது. சிறிது நேரத்தில் இதன் வேகம் அதிகரிக்கிறது. இதை உணர்ந்து கொள்ள செயல் நடைபெற்று கொண்டு இருக்கும்போது பாட்டிலின் மீது கையை வைத்தால் அது சூடாவதை உணரலாம்.
பாட்டிலின் வாயில் பற்பசை போல் வெளியாவதால் இதனை யானை பற்பசை என்று அழைப்பதுண்டு.

courtesy: http://www.sciencebob.com/experiments/toothpaste.php

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s