வவ்வால் Bat

உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்டுள்ள பாலூட்டிகளில் பெரும்பாலான இனங்கள் அழிந்துவிட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். மேலும் இவற்றின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருவதாகவும் கூறிவருகின்றனர். இன்றளவிலும் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய மிகப் பழமையான புதைப்பொருள் எலும்புக்கூடுகளை கண்டுபிடிக்கின்றனர். கிட்டதட்ட ஒரு லட்சம் பாலூட்டிகள் இந்த உலகில் இருந்ததாகவும் அவற்றில் பெரும் பகுதி அழிந்துவிட்டதாகவும் தற்போது 4000

தாகவும் இன்னும் ஒன்றிரண்டு தலைமுறைக்கு பிறகு பல உயிரினங்களை உயிரியல் கண்காட்சிகளில் மாத்திரமே காணக்கூடிய நிலை ஏற்படும் என்றும் திட்ட வட்டமாக கூறுகின்றார்கள். ஏனென்றுச் சொன்

னால் பல விலங்குகளின் நிலை விரல் விட்டு எண்ணக்கூடிய நிலையில் இருப்பதே இதற்குச் சான்றாகும். இந்த எண்ணிக்கையில் உள்ள பாலூட்டிகளில் ஏறக்குறைய நான்கில் ஒருபகுதி இனங்களைக் கொண்டது வவ்வால் இனமாகும். நாம் இந்தத் தலைப்பில் அல்லாஹ்வுடைய படைப்புக்களில் மற்றவற்றிலிருந்து வவ்வால் எந்த பண்புகளில் எந்த தகவமைப்பில் வேறுபட்டுள்ளது என்பதை விரிவான முறையிலே பார்ப்போம்.

“பறக்கக்கூடிய” தன்மையைப் பெற்ற ஒரே பாலூட்டி வவ்வால் ஒன்றுதான்

குட்டிப்போட்டு பறக்கக்கூடியத் தன்மையைக்கொண்ட இந்தப்பாலூட்டி பல அதிசியத்தக்க தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. கீழ் காணும் படம் வவ்வால் தன் சிறகை(கையை) விரித்து பறக்கக்கூடிய காட்சி.

உலகில் உள்ள பாலூட்டிகளில் மிகச்சிரியது பம்பல்பீ வவ்வால் ஆகும். தங்கள் உடல் எடையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக் உண்ணக்கூடிய அதிசயத்திலும் அதிசயம்.

வவ்வால்கள் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இவைகளின் உருவ அமைப்பை வைத்து பெரிய வவ்வால்கள் (Mega bats) எனவும் சிரிய வவ்வால்கள் (Mictro bats) எனவும் பிரிக்கப்பட்டுள்ளன. பெரிய வவ்வால்களில் குறிப்பிடத்தக்கது பிளையிங் ஃபாக்ஸ் (Flying fox) வவ்வால் ஆகும். இவை அதிகபட்சமாக 41 செ.மீ வரை வளரக்கூடியது. சிறிய வகை வவ்வால்களில் குறிப்பிடக்தக்கது பம்பல்பீ(Bumble Bee) வவ்வால் ஆகும். இவை மூன்று செ.மீ நீளமும் இரண்டு கிராம் எடையும் உள்ளதாகும். இதுதான் உலகில் உள்ள பாலூட்டிகளில் மிக சிறியதாகும். மேலும் இவைகளின் உணவு முறைகளை வைத்தும் இரண்டு பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று பழங்கள், பூக்கள் மற்றும் பூக்களின் குளுகோஸ், மகரந்தத் தூள் ஆகியவற்றை உண்டு வாழக்கூடியவை. மற்றது சிறிய பூச்சிகள் வண்டுகள் சிறிய வகை பாலூட்டிகள் சிறிய பறவைகள் ஈக்கள் கொசுக்கள் தவளை மற்றும் மீன்கள் ஆகியவற்றை உண்டு வாழுகின்றன. வவ்வால்களில் மொத்தம் 951 இனங்கள் இருப்பதாக கணக்கிட்டுள்ளார்கள். அவற்றில் மூன்றே மூன்று வகைகள் உயிர் பிராணிகளின் இரத்தத்தை மட்டுமே குடித்து உயிர் வாழக்கூடியது. உதாரணமாக வம்பயர் வவ்வால்கள் (Vampire) இவைகளின் கூறிய பற்களைக்கொண்டு முதலில் பிராணிகளின் உடலில் காயத்தை ஏற்படுத்துகின்றன. அதிலிருந்து ஒரு முறைக்கு 20 மில்லி வரை இரத்தத்தை குடிக்கின்றன. இந்த அளவு அவற்றின் எடையில் 40 சதவிகிதம் ஆகும். மேலும் ஒரு ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் வோல்ட் வார்ல்ட் புரூட் வவ்வால்கள் (Old world fruit bats) ஒரு நேரத்திற்கு 500 கிராம் வரை பழங்களை உண்ணுகின்றன. இந்த அளவு இவற்றின் எடையைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாகும். இதுவே அல்லாஹ்வின் ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்ச்சிதான். நம்முடைய பகுத்தறிவுக்கு ஏற்றுக்கொள்ள இயலாத ஒரு விசயமாக இருப்பினும் கூட அல்லாஹ்வுடைய ஆற்றலை எண்ணி வியப்படையக்கூடிய சம்பவமாகவே இது அமைந்துள்ளது.

தங்குமிடங்கள்

வவ்வால்கள் பொதுவாக ஒரு சமுதாயமாக கூடி வாழுகின்றன. ஒரு கூட்டத்தில் 2000க்கம் மேற்ப்பட்ட வவ்வால்கள் வாழுகின்றன. இவைகள் வருடம் முழுதும் தங்களுக்கு உணவுத்தட்டுபாடின்றி கிடைக்கக்கூடிய இடங்களை தேர்வு செய்து வாழுகின்றன. உலகின் அனைத்து பிரதேசங்களில் காணப்பட்டாலும் கூட மிக அதிக அளவில் வெப்பம் மிகுந்த நாடுகளில் பொதுவாகக் காணப்படுகின்றன. இவைகள் குகைகள் பாறை இடுக்குகள் பொந்துகள் பள்ளங்கள் ஆகியவற்றில் இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளுகின்றன. இன்னும் சில வவ்வால்கள் நாம் காணக்கூடிய வகையிலே மரங்களின் கிளைகளிலே தலைகீழாக தொங்கிக்கொண்டிருக்கின்றன. இவைகள் தலைக்கீழாக தொங்கக்கூடிய இந்க செயலும் கூட மற்ற எல்லாவற்றிலும் வேறுப்பட்டுள்ள ஒரு நிலைதான். மேலும் தலைக்கீழாக தொங்குவதற்கு எந்தவிதமான சக்தி இழப்பும் இவைகளுக்கு ஏற்படுவதில்லை. இதுவும் ஒரு ஆச்சர்யமான நிகழ்வாகும். மனிதர்களைப்பொருத்த வரை இரண்டு நிமிடங்கள் கைகளை ஒரே நிலையில் தூக்கி வைக்க இயலாது என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இவைகள் தலைகீழாக தொங்கும் போது இவற்றின் உடல் எடையின் காரணமாக பின்புற கால்களின் தசை நார்கள் ஒன்றுடன் ஒன்று தன்னிச்சையாக கோர்த்து இணைந்துக்கொள்வதன் மூலம் இவற்றின் விரல் நகங்கள் தொங்கும் மேற்புறத்தை இறுகப் பற்றிப்பிடித்துக்கொள்ளுகின்றன. இதனால் எந்த விதமான சிரமமுமின்றி இவை உறக்கத்தில் ஈடுபடுகின்றன.

உலகில் உள்ள உயிரினங்களில் ஆண் இனத்தின் மார்பில் பால் சுரக்கும் சம்பவம் தயாக் (Dayak) வவ்வால்களில் மட்டுமே காணக்கூடிய அதிசயம்

நாம் பொதுவாக அறிந்திருப்பது என்னவென்றால் முட்டையிடுதல் கர்பமடைதல் பாலூட்டுதல் போன்ற பண்புகளை பெண் உயிரினங்கள்தான் பெற்றிருக்கின்றன. 1994 ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் ஓர் உண்மையினை கண்டறிந்தார்கள். மலேசியாவில் வசிக்கக்கூடிய தயாக் (Dayak) பழந்தின்னி வவ்வால்களில் 10 ஆண் வவ்வால்களை ஆராய்ச்சி செய்து ஓரு அதிசியத்தக்க முடிவினை வெளியிட்டார்கள். நம் கற்பனையிலும் உதிக்காத ஒன்று ஆண் வவ்வால்களின் மார்பகங்களில் பால் சுரந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாலூட்டிகளில் ஆண் உயிரினத்தின் மார்பில் பால் சுரக்கக்கூடியது இது ஒன்றாகத்தான் இருக்கும். இந்த தகவமைப்பு அல்லாஹ்வுடைய அரும்பெரும் ஆற்றலை காட்டக்கூடியதாகவும் நான் அனைத்திற்கும் ஆற்றலுடையவன் என்பதை இந்த உலகத்திற்கு உணர்த்தக் கூடிய நிகழ்ச்சியாகவே நமக்கு தோன்றுகின்றது.

தூரப்பிரதேசத்தின் தட்பவெப்ப நிலைகளை துல்லியமாக அறிந்து 1600 மைல்களைக் கடந்து செல்லும் அதிசய ஆற்றல்

வவ்வால்கள் சராசரியாக மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றலுடையவை. சில வகை வவ்வால்கள் வருடம் முழுதும் ஒரே மரத்தில் தங்கிவிடுகின்றன. ஆனால் சிலவகை வவ்வால்கள் உதாரணமாக மெக்ஸிகன் பிரிடெய்ல் வவ்வால்கள் குளிர் காலங்களில் தங்கள் இருப்பிடத்தை மாற்றி வெப்பப் பிரதேசங்களுக்கு பெரும் தூரத்திற்க்கு புலம்பெயர்ந்து செல்லுகின்றன. அமெரிக்காவிலிருந்து 1600 மைல்களைக் கடந்து மெக்ஸிகோவை வந்தடைகின்றன. இவைகள் எப்படி இவ்வளவு தூரப்பிரதேசத்தின் கால தட்ப வெப்பநிலையை துல்லியமாக அறிகின்றன என்பதை விஞ்ஞானிகளால் திட்டவட்டமாகக் கூறமுடியவில்லை. இவைகளின் மூளைப்பகுதியில் பூமியின் காந்த மண்டலங்களை அறியக்கூடிய அமைப்பு எதுவும் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் அபிப்பிராயப்படுகின்றார்கள். நம்மைப் பொருத்த வரை தேனீக்களுக்கு வஹீ அறிவிக்கக்கூடிய இறைவன் இந்த வவ்வால்களுக்கும் வஹீ அறிவித்துத்தருகின்றான் என்பதில் மிக எளிதாக விடை கிடைத்தவிடுகின்றது.

அடர்ந்த இருளிலும் பார்க்கக்கூடிய கண் அமைப்பு

வவ்வால்கள் பகல் பொழுதை ஒய்விற்கும் இரவு பொழுதை தங்கள் வாழ்க்கைத் தேவைக்கும் பயன்படுத்துகின்றன. இவைகள் அந்திப்பொழுது முதல் வைகறைப்பொழுது வரை மிகச்சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவை. இரவில் இயங்கக்கூடிய சில உயிரினங்களில் வவ்வாலும் ஒன்றாகும். இரவில் நன்குப்பார்க்கக்கூடிய கண் அமைப்பைப் பெற்றிருக்கின்றன.அடர்ந்த இருளிலும் குறைந்க வெளிச்சத்திலும் நன்கு பார்க்கக்கூடிய கண் அமைப்பினை பெற்றுள்ளன. தூரக்கடல் தீவுகளில் வசிக்கக்கூடிய சில வவ்வால்கள் மாத்திரமே பகல் பொழுதில் தங்கள் இறையைதேடுகின்றன. இவைகளோடு மனிதர்களுக்கு உள்ளத்தொடர்பு இவற்றின் திடீர் குறுக்கீடு காரணமாக மனிதர்கள் சிலசமயம் பயத்திற்கு ஆட்படும் சம்பவம் நடைப்பெறுகின்றன. சராசரியாக வருடத்திற்கு ஒரு மனிதர் வவ்வாலினால் கடிக்கப்பட்டு இறப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இவை நாய் மற்றும் வண்டு கடித்து இறப்பவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் மிகக்குறைவு.

வம்பயர் வவ்வால் ஒரு விலங்குனுடைய இரத்தத்தை குடிக்கும் காட்சி

https://speakerdeck.com/ebrahimsha/osf-trust-deed

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s