ஒட்டக அதிசயம் Camel’s Wonder !

camelஅதிசயத்தை நிகழ்த்திக் காட்டுங்கள் என்று மக்கள் கேட்ட பொழுது,அமைதியாக குர்ஆனை சுட்டிக்காட்டினார்கள் நபிகள் நாயகம்(ஸல்),நம்பினால் நம்புங்கள்,இது பல விதங்களில் ஒரு மிகப் பெரும் அற்புதமே,உதாரணத்திற்கு இந்த வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள், ஒன்றாம் வகுப்பு குழந்தைகளை கேட்பது போல்,இறைவன் இல்லை என்று மறுப்பவர்களை நோக்கி சாதாரணமாக ஒரு கேள்வி கேட்கிறது (ஒட்டகத்தை பார்க்கவில்லையா? அது எவ்வாறு படைக்கப்பட்டிருக்கிறது – அல்குர்ஆன் 88:17) வாருங்கள் பதிலைப் பார்ப்போம்.
அதற்கு முன்பாக ‘பரிணாம வளர்ச்சி’ என்ற பைத்தியக்கார வாதத்தைப் பற்றி (இந்த வாதத்தை தாங்கிப்பிடிப்பவர்களை தான் அறிவாளிகள் என்று அழைக்கிறது உலகம்) தெரிந்து கொள்வோம். அதாவது மரத்திலிருக்கும் இலையை மேய்வதற்காக தலையை உயர்த்தி முயற்சி செய்த ஒரு ஆட்டின் செயல், அதன் குட்டியின் மீது பிரதிபலிக்க, நீண்ட கழுத்தைக் கொண்ட ஆடு பிறந்தது. பிறகு தலைமுறைகள் மாறி (மாறி,மாறி,மாறி…) நாம் இன்று காணும் ஒட்டகச் சிவிங்கியாக மாறியது. அது போல் தான் மனிதனும் குரங்கிலிருந்து மாறியவன் என்கிறது அந்த வாதம். மற்றவைகளைப் பற்றி ஏதாவது கிறுக்குத்தனமாகவாவது விளக்கம் கொடுக்கும் இந்த வாதம், ஒட்டகம் எந்த மிருகத்திலிருந்து மாறி தற்போது உள்ள நிலையை அடைந்தது என்பதற்கான சரியான விளக்கத்தை இன்று வரை கொடுக்க முடியாமல் தலையை பிய்த்துக் கொள்கிறது. ஒவ்வொரு அணுவுக்குப் பின்னாலும் படைத்தவன் ஒருவன் இருக்கின்றான். இந்த ஒட்டகம் ஒன்றே போதும் அதை நிரூபிக்க, பாலைவனத்து அரபியர்களால் 160 க்கும் அதிகமான செல்லப் பெயர்களால் அழைக்கப்படும் இந்த அதிசயப் பிராணியைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
படைத்தவனைப் பறைசாற்றும் இந்த அதிசயப் பிராணி உணவும், நீரும் கிடைக்கும் பொழுது அதை திமிலாக்கிக் கொள்கிறது (45 முபுளு எடை இருக்கும், அதில் அதிகமாக கொழுப்பு இருக்கும்) எதற்காக என்றால் தேவை காலத்திற்காக,உணவோ,நீரே கிடைக்காத வறட்சியான நேரத்தில் அதன் திமிலின் கொழுப்பிலிருக்கும் ‘ஹைட்ரஜனோடு’ அது சுவாசிக்கும் காற்றில் உள்ள ‘ஆக்ஸிஜனை’ கலந்து நீராகவும், உணவாகவும் மாற்றிக் கொள்கிறது.
உணவு மட்டும் கிடைத்தால் போதும்,நீரின் தேவையில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். உணவோ, நீரோ கிடைக்காத பட்சத்தில் கூட எந்த தேவையுமில்லாமல் ஒரு மாதம் பயணம் செய்யும். குளிர்காலங்களில் ஆறு மாதம் வரை கூட நீர் குடிக்காமல் ஜீவிக்கும். நீர் கிடைத்தால் 100 லிட்டர் தண்ணீரை பத்து நிமிடங்களுக்குள் குடித்து விடும் (Pரஅp).
குடிக்கும் நீரை இரத்தத்தின் சிகப்பு அணுக்களில் ஏற்றிக் கொள்கிறது. அதற்காக அணுக்கள் அதன் உண்மையான அளவை விட 200 மடங்கு பிரிந்து இடமளிக்கிறது. குட்டி போட்டு பாலூட்டும் (மனிதன் உட்பட) மற்ற பிராணிகள் அனைத்திற்கும் இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் வட்ட வடிவமாக இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் முட்டை வடிவத்தில் இருக்கும். மனிதர்களுக்கு உடல் 12மூ நீர் குறைந்தாலே போதும் கதை முடிவுக்கு வந்து விடும். ஆனால் ஒட்டகம் 40மூ இழந்தால் கூட எந்த பாதிப்பும் இல்லாமல் வாழும். குட்டிப் போட்டுப் பாலூட்டும் (மனிதன் உட்பட) பிராணிகளில் நீரிழப்பை தாங்கிக் கொள்வதில் ஒட்டகத்திற்கு நிகராக வேறு எதுவுமில்லை. நீரிழப்பினால் உடல் வறட்சி ஏற்படும் சமயத்தில் மற்ற பிராணிகளின் (மனிதன்) இரத்தம் பாகு நிலைக்கு வந்து விடும். அதன் காரணத்தால் வாழ தேவையான இதமான சூட்டை தோலுக்கு அளிக்க முடியாமல் எகிறும். பிறகு, சூட்டினால் வெடிப்பு மரணம் (நுஒpடழளiஎந ர்நயவ னுநயவா) நிகழ்ந்துவிடும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் அப்படி நேராது. ஏனென்றால் உடல் திசுக்களில் உள்ள நீர் மட்டும் குறையுமே தவிர, அதன் இரத்தத்தில் நீர் அளவு குறையாமல் இருக்கும். நீரில்லாமல் வறட்சி ஏற்பட்டு நீண்ட இடைவெளிக்கு பிறகு நீர் குடித்தால் அது குறைந்த அளவாக இருந்தால் கூட மற்ற பிராணிகள் (மனிதன்) நீர் போதை (றுயவநச ஐவெழஒiஉயவழைn) ஏற்பட்டு இறப்பு நிகழ்ந்து விடும். ஆனால் ஒட்டகம் வறட்சிக்கு பிறகு 100 லிட்டர் குடிக்கும், ஆனால் சாகாது.
அதன் உடல் சூடு 104 கு டிகிரியை அடைய வேண்டும். அப்பொழுதுதான் அதற்கு வியர்வையே வரும். அது வரை வியர்க்காது. (மனிதர்களுக்கு 98 கு டிகிரி -க்கு மேலே போனால் ஜூரம் என்று பெயர்) அதன் உடல் அளவிற்கு அதிகமான வியர்வை சுரப்பிகள் இருக்க வேண்டும், ஆனால் மிகவும் குறைவாக இருப்பது ஒரு விசேஷம். மற்ற பிராணிகள் (மனிதன் உட்பட) உடல் சூட்டை வியர்த்து குளிர்வித்துக் கொள்ளும். ஆனால் ஒட்டகம் மட்டும் பகல் காலங்களில் அடிக்கும் வெயிலின் வெப்பத்தை 12 கு டிகிரி வரை சேர்த்து வைத்துக் கொண்டு (மனிதர்களுக்கு ஒரு சில டிகிரி அதிகரிப்பது நோயின் அறிகுறி) இரவின் குளிரான காற்றை பயன்படுத்தி வியர்க்காமல் (வியர்ப்பது நீருக்கு நஷ்டம்) சூட்டை வெளியாக்கி விடுகிறது.
ஒட்டகத்திற்கு இருப்பது போல சக்தி வாய்ந்த சிறுநீரகம் வேறு எதற்கும் கிடையாது. நம்முடைய சிறுநீரில் அதிக பட்சமாக தாது கழிவுகள் 8 சதமும், 92 சதம் நீரும் இருக்கும். ஆனால் ஒட்டகத்தின் சிறுநீரில் 40 சதத்திற்கு அதிகமாக கழிவும், குறைவான நீரும் இருக்கும். அந்த அளவிற்கு குறைந்த நீரைக் கொண்டு கழிவை வெளியேற்றும் சக்தி வாய்ந்தது. (நம்முடையதாக இருந்தால் கல் அடைப்பு ஏற்பட்டு வேலையை நிறுத்தி இருக்கும்) மிகவும் குறைந்த அளவு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளது ஒட்டகம். அதன் உடம்பில் புரோட்டீன் என்ற சத்து குறைய ஆரம்பத்தால், சிறுநீரில் வெளியாகும் யூரியா என்ற கழிவின் அளவை குறைத்துக் கொண்டு அதை (ஆiஉசழடியைட ளுலவொநளளை) புரோட்டீனோடு கலந்து சக்தியாக மாற்றிவிடுகிறது அதன் சிறுநீரகம்.
மற்ற பிராணிகளின் (மனிதன் உள்பட) மலம் காய்வதற்கே இரண்டு நாட்கள் தேவைப்படும். ஒட்டகத்தின் மலத்தை போட்ட ஒரு சில மணி நேரத்தில் பற்ற வைத்துவிடலாம் என்கிறார் மிருக ஆராய்ச்சியாளர் டேவிட் ஆட்டன்பரோ, அந்த அளவிற்கு நீரே கலக்காமல் சக்கையை மட்டும் வெளியேற்றும் சக்தி வாய்ந்தது.
நம்முடையை மூச்சை ஒரு கண்ணாடியின் மேல் விட்டு நோக்கினால் அங்கே ஈரம் படர்வதை காணலாம். ஆனால் ஒட்டகத்தின் மூச்சில் ஈரம் மிகவும் குறைவாக இருக்கும். ஏனென்றால் மற்ற எதற்கும் இல்லாத விசேஷ மூக்கு அமைப்புதான் காரணம். அதன் மூக்கிற்குள் அமைந்திருக்கும் அடுக்கடுக்கான திசு அமைப்புகள் அது சுவாசித்து வெளியேற்றும் காற்றில் உள்ள ஈரத்தின் மூன்றில் இரண்டு பகுதியை வெளியேற்ற விடாமல் தடுத்து விடுகிறது. மேலும் அதன் மூக்கிலிருந்து வழியும் சளியைக் கூட அதன் மூக்கின் அமைப்பு உதட்டின் மேல் வெடிப்பின் வழியாக மீண்டும் வாய்க்குள் அனுப்பிவிடுகிறது. பல மைல்களுக்கு அப்பால் உள்ள நீரை மோப்ப சக்தியால் அறிந்து கொள்ளும் சக்தி வாய்ந்தது அதன் மூக்கு.
கடுமையான வெப்ப காலங்களில் உண்பதை குறைத்துக் கொண்டு உடம்பை இதமாக வைத்துக் கொள்கிறது. நிழல் கிடைத்தால் உடனே பயன்படுத்திக் கொள்ளும். நிழல் இல்லையென்றால் சூரியனை நோக்கி உடம்பை வைத்துக் கொள்ளும். ஏனென்றால் குறைவான வெயில் மட்டும் அதன் உடம்பில் படும்படியாக அதன் உடம்பே அதற்கு நிழலை ஏற்படுத்திவிடுகிறது. அதற்கு காரணம் நீண்ட முட்டை வடிவமான அதன் உடல் அமைப்பு ஆகும்.
ஒட்டகங்கள் கூட்டங்கூட்டங்களாக பிரிந்துக் கொண்டு நெருங்கிக் கொள்ளும். ஏனெனில் உடல் சூட்டை சுற்றுப்புற காற்றின் சூட்டைவிட குறைவாக வைத்துக் கொள்வதற்காக, அதன் உடலில் படர்ந்தது போல உள் உரோமங்கள் உடல் சூட்டை வியர்வையின் உதவியில்லாமல் வெளியேற உதவுவதோடு வெளிசூட்டையும், வெயிலின் தாக்கத்தையும் உடம்பிற்குள் செல்லாமல் தடுத்து விடுகிறது. அதன் நீண்ட உயரமான கால்கள் அதன் உடலை உயரே வைத்துக் கொள்கிறது. ஏனென்றால் பாலைவனத்தின் மணல் பரப்புகளின் மேல் சூடு அதிகமாக படர்ந்திருக்கும்.
இப்படியாக, சுவாசம், சிறுநீர், வியர்வை, எச்சில் என்று எதன் மூலமாகவும் ஒரு துளி நீரைக் கூட வீணாக்கி விடாமல் ஜாக்கிரதையாக இருக்கிறது ஒட்டகம் (நீர் கஞ்சன்). சரி, நீரை பார்த்தோம் மணலுக்கு போவோம் வாருங்கள்.
மற்ற மிருகங்கள் குழம்புகளை கொண்டு நடக்கும், ஆனால் ஒட்டகம் அதன் வெடித்த ஒரு குழம்புகளை இணைக்கும் மெத்தென்ற பட்டையான சதை இணைப்பைக் கொண்டு நடக்கிறது. (அதன் பாத அமைப்பிற்கு சரியான உதாரணம் ளுழெற ளூழநள ஆகும்) அதன் இரு குழம்புகளும் விரித்து கொள்ளும் காரணத்தால் 680 முபள வரை எடையுள்ள ஒட்டகம்,450 முபள வரை சுமையை சுமந்துக் கொண்டு மணலில் கால்கள் புதைந்து விடாமல் ஓட முடிகிறது (நாம் ஒரு சில அடிகள் நடந்தால் நாக்கு தள்ளிவிடும்) குட்டி போட்டு பால் கொடுக்கும் (மனிதன் உட்பட) பிராணிகள் அனைத்திற்கும் கால்களில் இரண்டு மடக்கும் மூட்டு இணைப்புகள் (யுமெடந துழiவெ) மட்டும் இருக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு மட்டும் மூன்று இணைப்புகள் இருக்கும். அதனால்தான் ஒட்டகத்தால் எளிதாக பாலை மணலின் மேடு பள்ளங்களில் செல்லமுடிகின்றது.
மணலோடு சேர்ந்து காற்று வீசும் பொழுது நாம் ஜன்னலுக்கு திரையிடுவது போல் மூக்கை மூடிக்கொள்ளும் வசதியுள்ளது ஒட்டகத்திற்கு. அதன் காதுகளின் உள்ளேயும், வெளியேயும் அமைந்திருக்கும் முடிகள் மணலோ, தூசியோ, காதுக்குள் சென்று விடாமல் தடுத்து விடுகிறது. அதன் இமையிலுள்ள நீண்ட மயிர்கள் மணலிருந்து கண்ணிற்கு பாதுகாப்பு அளிக்கிறது.
அதன் புருவத்திற்கு மேலே அமைந்துள்ள முகடு போன்ற எலும்பமைப்பு, பாலை சூரியனின் பிரகாசமான வெளிச்சம் கண்ணைத் தாக்கிவிடாமல் தடுத்து விடுகிறது (ளுரn ஊடயளள). கண்ணிற்கு கீழே உள்ள இமைப் போன்ற அமைப்பு, கண்ணை மணல் தாக்கி விடாமல் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் பாலை சூரியனின் வெளிச்சத்தை பாதியாக குறைத்து விடுகிறது. ஆனால் பாதையை மறைத்துவிடுவதில்லை. அதன் தலையின் ஓரத்தில் கண்கள் அமைந்திருப்பதால் எல்லா இடத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கும் வசதியுள்ளது ஒட்டகம். பாலைவனத்தின் சூட்டில் கண்கள் காய்ந்துவிடாமல் இருப்பதற்காக அதிகமான நீரை சுரந்து கண்களை ஈரம் குறையாமல் வைத்துக் கொள்கிறது சுரப்பிகள்.
எங்கேயாவது தூரத்தில் உணவோ,நீரோ கிடைக்கும் பாலைவெளியில்,அதை சிரமமில்லாமல் தேடுவதற்கு அதனுடைய நீண்ட கழுத்து உதவுகிறது. (12 அடி உயரத்தில் தலை இருக்கும்).
நான் பசுமாடு. புல்லும்,புண்ணாக்கும் கொடுத்தால்தான் பால் தருவேன் என்ற கர்வம் ஒட்டகத்திடம் கிடையாது. கிடைத்ததை தின்றுவிட்டு பத்து பசுமாடு கொடுக்கும் பாலை ஒரு ஒட்டகம் கொடுக்கிறது. அதுவும் அபரிதமான அளவு வைட்டமின் ‘சி’யுடன்.
மற்ற மிருகங்கள் மேயும் பொழுது தாவரங்களில் உள்ள ஈரம் தரையில் சிதறும். அதைக்கூட வீணாக்கிவிடாமல் மேயும் தன்மை கொண்டது ஒட்டகம். பாலைவனத்தில் அதிகமான முட்செடி தான் கிடைக்கும். அதை மேய்வதற்கான அழுத்தமான ரப்பர் போன்ற உதடுகள் கொண்டது ஒட்டகம். எந்த அளவிற்கு என்றால் அதன் உதட்டில் பட்டு முட்களே உடைந்துவிடும். மேலும் விசேஷ உதட்டமைப்பு நாக்கை நீட்டாமல் மேய உதவுகிறது.
சராசரியாக 86 வயதைக் கொண்ட ஒட்டகம், நான் புலி, பசித்தாலும் புல்லைத் தின்ன மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்காது. உணவு பஞ்சம் என்றால் எலும்பு, மீன், இறைச்சி, தோல் சில சமயங்களில் முதலாளியின் கூடாரத்தையே தின்றுவிடும்.
வியர்வை ஆகட்டும், எச்சில் ஆகட்டும் 99 சதம் நீர் இருக்கும். கழிவுகளும் அபரிதமான நீரை கொண்டதாகத்தான் இருக்கும். சுவாசத்திலும் நீர் வெளியாகிறது. இது ஒட்டகத்திற்கு எப்படி தெரிந்தது? இந்த அளவிற்கு அறிவுப்பூர்வமாக தன் உடலை அமைத்துக் கொள்ள தெரிந்த ஒட்டகத்திற்கு அறிவிருந்தால் எங்கேயாவது நீரும், உணவும் தாராளமாகக் கிடைக்கும் இடத்தை நோக்கி ஓடியிருக்கலாம். (மணிக்கு 5 கி.மீ வேகத்தில் ஒரு நாளைக்கு 40 கி.மீ பிரயாணம் செய்யும்) முட்டாள் ஒட்டகம் பாலைவனத்தில் இவ்வளவு கஷ்டப்பட வேண்டிய தேவையிருந்து இருக்காது. சரி பாலைவன சூழ்நிலைக்கு ஏற்ப ஒட்டகம் தானாக பரிணாம வளர்ச்சி அடைந்தது என்றே வைத்துக் கொள்வோம். அதன் படி பாலைவனத்தில் வசிக்கும் மனிதன் இது வரை பாதி ஒட்டகத் தன்மைக்கு மாறியிருக்க வேண்டுமே?
படைப்பாளன் உண்டா? அல்லது பரிணாம வளர்ச்சியா?என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். சரி இந்த கிறுக்குத்தனமான வாதத்தை இத்துடன் விட்டுவிடுவோம். நம்முடைய அலட்சியத்தை கொஞ்சம் பார்ப்போம் வாருங்கள்.
மறுமையில் ஒரு நாள் ஆயிரம் வருடங்களுக்கு சமமானது என்கிறது குர்ஆன். அதன் படி பார்த்தால் சராசரியாக 60 வயது வாழ்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதில் பாதியை தூக்கத்தில் கழித்து விடுகிறோம். ஆக மறுமை நாள் கணக்குபடி நம்முடைய இந்த உலக வாழ்க்கை ஒரு சில மணி நேரம் தான் ஆகிறது. இந்த அற்பமான சில மணி நேர வாழ்க்கைக்காக உன்னதமான மறுமையை விட்டுவிடுகிறோம். உன்னதமான குர்ஆனையும்,உயர்வான நபி வழியையும் முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்து விட்டு மனம் போன போக்கில் வாழ்கின்றோம். அதன்படி நடக்கவோ, அதன் உன்னத கருத்துக்களை உலகிற்கு எடுத்துச் சொல்லவோ, அப்படிச் சொல்பவர்களுக்கு உதவவோ (நாயிடம் கிடைத்த தேங்காய்) தவறியதால் ஏற்படும் விளைவுகளை முஸ்லிம்களாகிய நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.
மேலும் மறுமையில் இதைவிட கொடிய தண்டனை வேறு இருக்கிறது. ஏனென்றால் குர்ஆன் பொய் சொல்லாது. அதன் வார்த்தை பொய்யானதாக சரித்திரம் இல்லை. இல்லாத ஒன்றைப் பற்றி பேசாது.
எனது அருமை முஸ்லிம் சகோதர, சகோதரிகளே! குர்ஆன் நம்மை பெருமையாக பேசுகிறது. அதாவது நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு சாட்சியாளர்களாக ஆகுவதர்க்காகவும் நம் தூதர் உங்களுக்கு சாட்சியாளராக இருப்பதற்காகவும் நடுநிலையான சமுதாயத்தினராக நாம் உங்களை ஆக்கினோம் (2:143) என்கிறது. படைத்தவனுக்கு உண்மையாளர்களாக இருக்கிறோமா என்பதை நீங்களே உங்கள் மனசாட்சியிடம் கேட்டுப்பாருங்கள். குர்ஆனை கிளிப் பிள்ளை போல் ஓத மட்டும் செய்யாதீர்கள். ஒரு நாளைக்கு ஒரு வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் அர்த்தத்தை புரிந்துக் கொள்ளுங்கள். அது சம்பந்தமாக சிந்தியுங்கள். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்குங்கள். இதன் அற்புத கருத்துக்களை அறிவுப்பூர்வமான முறையில் உலகிற்கு எத்தி வைக்க முயற்சி செய்யுங்கள். நிறைய புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். புத்தகங்களை எழுதவும்,படிக்கவும் முயற்சி செய்யுங்கள்.

ஆதார நூல்கள்:

1) Quran 88: 17, 2: 143
2) The Deserts – A. Starker Leopold – Page 98 – 99
3) Desert – Susan Arritt Page – 125
4) The Desert Realm, National Geography Society – Page – 289
5) Deserts a Miracle of Life – Jim Flegg, Page 62
6) The Guiness Encyclopedia, Page 159
7) The World Book Encyclopedia Ref: Camel
8) Encyclopedia Americana , Vol -5 Page 262
9) Chambers Encyclopedia, Vol 2 Page 795
10) Camel – Caroline Amold, Page 30 / 34
11) Mammals of the southern Gulf – Christangross – Page 11
12) Amazing Animals – The life Book, Page 22
13) Life Sense – John Downer – BBC- Page 100 – 103
14) Anantha Vikadan, Matham 28 / 03 / 99 – Page 122
15) Muthaaram – 21 / 01/00 Page 15 / 23

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s