எகிட்னா (ECHIDNA)

echidnaஎகிட்னா என்று அழைக்கப்படும் இச் சிறிய உயிரினம் பாலூட்டி (MAMMAL) வகையைச் சேர்ந்த ஒரு அதிசய விலங்காகும். இவை பறவைகளைப் போன்று முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. பறவைகளைப் போன்று முட்டையிடும் தன்மையைக் கொண்டிருப்பினும் விலங்குளைப் போன்று பால் கொடுக்கும் தன்மையும் ஒருங்கே பெற்றிருப்பதால்தான் விஞ்ஞானிகளின் அரியதொரு பட்டியலில் இவை இடம் பிடித்துள்ளன.

எகிட்னா என்னும் இந்த உயிரினம் ஆஸ்திரேலியா மற்றும் தாஸ்மேனியாவின் அடர்ந்த வனப்பகுதியில் வாழ்கின்றன. இவைகள் தங்களின் முக்கிய உணவாக எறும்புகள் மற்றும் கறையான்களை உட்கொள்கின்றன. எனவே இவைகள் எறும்பு தின்னி என்ற பெயரால் தமிழில் அழைக்கப்படுகின்றன. மேலும் இவைகள் எறும்புகள் மற்றும் கறையான்கள் அதிகம் கிடைக்கக்கூடிய இடங்களையே தங்கள் வாழுமிடமாக அமைத்துக் கொள்கின்றன.

وَكَأَيِّن مِنْ دَابَّةٍ لَا تَحْمِلُ رِزْقَهَا اللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்துத் திரிவதில்லை. அல்லாஹுவே அவற்றுக்கும் உங்களுக்கும் உணவளிக்கின்றான். அவன் செவியுறுபவன் , அறிந்தவன். (29:60)

உருவ அமைப்பும் தகவமைப்பும்
உருவ அமைப்பும் இவை வாழும் தகவமைப்பையும் ஒப்பிடும் போது இவை உருவத்தில் மிகச் சிறியவை. இவை 35 முதல் 53 செ.மீ வரை நீளம் உடையவை. குட்டையான வாலும் மிக உறுதியான கால்களும் கொண்டவை. இவற்றின் உடலில் வளரும் ஈட்டிகளைப் போன்ற உறுதியான முடிக் கற்றைகள் இவற்றின் தலையாய பாதுகாப்பு அரணாக விளங்குகின்றது. இவற்றின் கால்களில் வளரும் உறுதியான நகங்களைக் கொண்டு கெட்டியான பூமியின் பரப்பில் செங்குத்தான பள்ளங்களைத் தோண்டி தங்களின் உறைவிடமாக ஆக்கி தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன. இவைகளின் உடலில் வளரும் முட்களைப்போன்ற கூரிய முடிக்கற்றைகள் ஆபத்தான நேரங்களில் சிலிர்த்துக் கொள்வதன் மூலம் உடலைச்சுற்றி ஊசியைப் போன்ற பாதுகாப்பு அரணை உண்டாக்குவதன் மூலம் இவைகளை எந்த உயிரினங்களும் (புலி சிங்கம் உட்பட எவையும்) எளிதாக நெருங்க முடிவதில்லை. மனிதர்களில் சிலர் இவற்றின் இறைச்சியை உண்பதனால் மனிதர்களே இவற்றின் மிகப்பெரிய எதிரியாக அமைந்துள்ளார்கள்.

இனப்பெருக்கமும் வாழ்க்கையும்
இவை ஆண்டுக்கு ஒருமுறை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. இதன் மூலம் கருவுறும் பெண் எகிட்னாவின் கற்பகாலம் 9 முதல் 27 நாட்கள்வரை ஆகும். அதன் பிறகு இவை ஒன்று அல்லது அரிதாக இரண்டு முட்டைகளை இடுகின்றது. இட்ட முட்டைகளை அது தன் அடி வயிற்றில் உள்ள தோல் போன்ற (கங்காருக்கு இருப்பது போல்) பைக்குள் வைத்து 10,11 நாட்கள் வரை அடை காக்கின்றது. இதிலிருந்து வெளிவரும் குஞ்சு(குட்டி) தன்தாயின் வயிற்றில் அமைந்துள்ள பையிலேயே ஏறக்குறைய 55 நாட்கள் வரை தங்குகின்றன. முட்டையிலிருந்து வெளி வந்த இந்த குஞ்சுகள் தன் தாயின் வயிற்றில் அமைந்துள்ள பால் சுரப்பிகளிலேயே பாலை அருந்துகின்றன. இவைகள் பாலூட்டிககளைப் போன்று பால் சுரப்பி அமைப்பைப் பெற்றிருக்கவில்லை. அதன்அடி வயிற்றில் வியர்வை சுரப்பதுப் போன்று சுரக்கும் பாலை உறிஞ்சிக் குடிக்கின்றன. பிறகு குட்டி வளர்ந்து தன்னிச்சையாக நடக்கக்கூடிய நிலைக்கு வந்தவுடன் தன் தாயின் வயிற்றில் உள்ள பாதுகாப்பான பைகளைவிட்டு வெளிவருகின்றன.

எகிட்னாவின் இந்த அதிசயமான ஒரு வாழ்க்கைத் திட்டத்தை அல்லாஹ் அமைத்து கொடுத்திருக்கின்றான் என்று நம்புவதில் நம்மைப் பொறுத்த வரை எந்தச் சிரமமும் இல்லை. விலங்குகளின் இப்படிப்பட்ட அமைப்புகளை ஒரு ஆச்சரியமான நிகழ்வாகவே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

பரிணாமக் கதைகளும் பகுத்தறிவாளர்களும்
குரங்கிலிருந்துதான் மனிதன் பரிணாமம் அடைந்தான் எனச் சொல்லக்கூடிய அறிவு ஜீவிகளிடமிருந்து(?!), இப்பொழுது வாழ்கின்ற எந்த ஒரு குரங்கும் மனிதனாக ஆவதில்லையே ஏன்? என்ற கேள்விக்கு இதுவரை எந்த ஏற்கத்தக்க பகுத்தறிவுப் பூர்வமான பதிலும் இல்லை. மேலும் இக்கூற்று நிரூபிக்கப்படாத ஒன்று என்பதால், பிசுபிசுக்கப்பட்டு ஓரம் தள்ளப்பட்டுள்ளது. அதனால்தான், பேய்களைப் பார்த்ததாகக் கதைவிடும் பத்திரிக்கைகள் கூட இந்த ஊரில் இந்த நாட்டில் போன வருடம் ஒரு குரங்கு (பரிணாம வளர்ச்சி மூலம்) மனிதனாக ஆனது என்று எழுத முடியவில்லை.

 وَفِي خَلْقِكُمْ وَمَا يَبُثُّ مِنْ دَابَّةٍ آيَاتٌ لِقَوْمٍ يُوقِنُونَ

உங்களைப் படைத்திருப்பதிலும் ஏனைய உயிரினங்களைப் பரவச் செய்திருப்பதிலும் உறுதியாக நம்பக்கூடிய சமுதாயத்திற்கு பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன் 45:04)

By E. உஸ்மான் அலி from  islamkalvi.com

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s