இஸ்லாமும் அறிவியலும்

READING QURANஅறிவியலிற்கும் மதத்திற்கும் நடந்து கொண்டிருக்கும் கடும் சண்டையின் நடுவில் மேற்கத்திய சிந்தனை மாட்டிக் கொண்டிருக்கின்றது. மதமும் அறிவியலும் சந்திக்கும் ஒரு இடம் இருக்கின்றது என்ற உண்மையை ஏற்றுக் கொள்வது என்பது மேற்கத்திய சிந்தனையாளர்களுக்கு ஏறக்குறைய சாத்தியமற்ற ஒன்றாகும். நபி ஆதம் (அலை) அவர்கள் உண்ண தடுக்கப்பட்டிருந்த மரம் அறிவு|எனும் மரமாகும் என கிறித்தவர்களின் பைபிள் கூறுகின்றது. இதனால், அதனுடைய (கனியை) அவர் உண்ட பின் அவருக்கு முன்பு இல்லாத சில அறிவை அவர் பெற்றார். இதன் காரணமாகத்தான் முஸ்லிம்களிடமிருந்து வரும் அறிவியல் உண்மைகளை ஏற்பதா வேண்டாமா என்று ஐரோப்பா இரண்டு ஆண்டுகளாக விவாதம் செய்து கொண்டிருந்தது.

அறிவியல் அறிவை தேடுவதுதான் ஆதி பாவத்தின் காரணமாக இருந்தது என்று சர்ச் தீர்ப்பளித்தது. ஆதம் மரத்திலிருந்து (கனியை) உண்ட பின்பு சில அறிவுகளைப் பெற்றார், இறைவன் அவரின் மேல் கோபப்பட்டு அவனின் அருளிலிருந்தும் அவரை தடுத்துக் கொண்டான் என்ற பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்டிருப்பதை பிஷப்புக்கள் ஆதாரமாக காட்டினர். அறிவியல் அறிவு தேவையற்ற ஒன்று என முற்றிலுமாக சர்ச்சினால் நிராகரிக்கப்பட்டது.

இறுதியாக, சுதந்திர சிந்தனையாளர்களும் அறிவியலாளர்களும் சர்ச்சினுடைய அதிகாரத்தை எதிர்கொள்ளும் அளவிற்கு வலிமை பெற்ற போது அவர்கள் நேர் எதிர் திசையில் சென்று பழி தீர்த்துக் கொண்டது மாத்திரமல்லாமல் மதத்தின் எந்தவொரு அதிகாரத்தையும் அமுக்கிப் போட்டனர். அவர்கள் சர்ச்சின் அதிகாரத்தை ஒடுக்குவதற்கு சாத்தியான அனைத்தையும் செய்து சர்ச்சின் செல்வாக்கை ஒரு குறுகிய வரையறுக்கப்பட்ட இடத்தில் ஆகுமளவிற்கு குறைத்து விட்டனர்.

அதனால்தான் ஒரு மேற்கத்தியவரிடம் மதமும் அறிவியலும் என்பது பற்றி உரையாடினாலே அவர் வியப்பின் உச்சிக்கே சென்று விடுகின்றார். அவர்களுக்கு இஸ்லாம் பற்றி தெரியாதுதானே! இஸ்லாம் அறிவிற்கும் அறிவாளிகளுக்கும் மிக உயர்ந்த இடம் அளிக்கின்றது என்பதும், இறைவன் திருக்குர்அனில் கூறியுள்ளது போல், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று சான்று பகர்வதற்கு வானவர்களுக்கு அடுத்தபடியாக அறிஞர்களையே அது கருதுகின்றது என்பதும் அவர்களுக்கு தெரியாது.

அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) (47:19)

உயர்ந்தோனும் புகழுக்குரியோனுமான அல்லாஹ் கூறுகின்றான்:

ஆகவே, நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (வேறு) நாயன் இல்லை என்று நீர் அறிந்து கொள்வீராக (3:18)

அல்லாஹ்வினால் அளிக்கப்பட்ட அறிவின் மேன்மையின் காரணமாகவே ஆதம் (அலை) வானவர்களை விட உயர்ந்தவரானார் என்று திருக்குர்ஆனிலிருந்து தெரிய வருகின்றது. திருக்குர்ஆன் கூறும் இச்சம்பவம் பைபிளின் கூற்றை மறுக்கின்றது. பைபிள் சீர்கெடுக்கப்பட்டு விட்டது என்றே முஸ்லிம்கள் நம்புகின்றனர். திருக்குர்ஆனைப் பொருத்த வரை ஆதம் (அலை) அவர்களுக்கு அறிவு கொடுக்கப்பட்டது என்பதானது கண்ணியத்தின் அடையாளமே அல்லாமல் அவரை சுவர்க்கத்திலிருந்து விரட்டி விட காரணமான ஒன்று என்பதல்ல. இதனால்;;;;;;;;தான், இஸ்லாமும் அறிவியலும் என்ற தலைப்பைப் பற்றி மேற்கத்திய சிந்தனையாளர்களிடம் ஒருவர் உரையாடும் போது அவர்கள் தங்களுடைய சொந்த வேதம் மற்றும் கலாச்சார புத்தகங்களில் காணப்படுவது போன்ற வாதமே இவர்களிடமும் இருக்கும் என்று எதிர்பார்க்கின்றார். அதனால்தான், திருக்குர்ஆன் மற்றும் சுன்னா ஆகியவற்றில் காணப்படும் வெள்ளிடை மலை போன்ற அறிவியல் உண்மைகள் அவர்களின் முன் வைக்கப்படும் போது அவர் வியப்பால் மலைத்துப் போகின்றனர்.

அவ்வாறு வியப்பின் உச்சிக்கே சென்றவர்களில் ஒருவர்தான் டாக்டர் ஜோ லீ ஸிம்ப்ஸன். இவர் அமெரிக்காவிலுள்ள ஹோஸ்டன் மாநிலத்திலுள்ள பெய்லர் மருத்துவக் கல்லூரியின் மகப்பேறு மற்றும் பெண்கள் மருத்துவத் துறையின் தலைவரும் மற்றும் மலிக்யூலர் மற்றும் ஹ்யூமன் ஜெனிடிக்ஸ் ஆகிய துறைகளில் பேராசிரியரும் ஆவார். அவரை நாம் முதல் முறையாக சந்தித்த போது பேராசிரியர் ஸிம்ப்ஸன் அவர்கள் நாம் சொல்;;வது திருக்குர்ஆனிலும் சுன்னாவிலும் உள்ளதுதானா என்று உறுதி செய்ய கொள்ள வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றாhர். அவருடைய சந்தேகத்தை நாம் நீக்கினோம். சிசுவின் வளர்ச்சி பற்றி கோடிட்டு காட்டும் திருமறை வசனத்தை அவருக்கு அளித்தோம். புதிய பிறப்பின் பரம்பரை குணம் மற்றும் குரோமோசோம்களின் சேர்க்கை ஆகியவைகள் ஆண் பெண் ஆகியவர்களின் அணுக்கள் வெற்றிகரமாக ஒன்று சேர்ந்த பின்புதான் ஏற்படுகின்றது என திருக்குர்ஆன் நமக்கு அறிவிப்பதை அவருக்கு நிரூபித்துக் காட்டினோம். இந்த புதிய மனிதனின் கண், தோல், தலை முடி ஆகியவற்றின் நிறத்தையும் அது போன்ற தன்மைகளையும் இந்த குரோமோசோம்கள் உள்ளடக்கியுள்ளன என்பது நமக்குத் தெரியும்.

இப்படியாக, மனித உருவாக்கத்திற்கு தேவையான பல இந்த குரோமோசோம்களால் தீர்மானிக்கப்படுகின்றன. சிசுவின் ஆரம்ப வளர்ச்சிப் படி நிலையான நுத்பாபடி நிலையில் இந்த குரோமோசோம்கள் உருவாகத் தொடங்குகின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதனால் மனிதனை இந்த புதிய பிறவியை மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திக் காட்டும் தனித் தன்மைகள் மிகவும் ஆரம்ப நிலையான நுத்பா படிநிலையிலேயே தீர்மானிக்கப்பட்டு விடுகின்றன. மேன்மை பொருந்திய எல்லாப் புகழுக்கும் உரிய அல்லாஹ் இந்த உண்மையை திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

(நன்றி கெட்ட மனிதன்) அழிவானாக! எவ்வளவு நன்றி மறந்தவனாக அவன் இருக்கின்றான்! எப்பொருளால் அவனை (அல்லாஹ்) படைத்தான்? (என்பதை அவன் சிந்தித்தானா?) (ஒரு துளி) திரவத்திலிருந்து அவனைப் படைத்து, அவனை (அளவுப்படி) சரியாக்கினான். (80:17-19)
குபை. 2.1

கருத்தரித்த முதல் நாற்பது நாளில் உடலின் எல்லா பாகங்களும் உறுப்புக்களும் முழுமையாக ஆனால் ஒன்றன் பின் ஒன்றாக உருவாகுகின்றன. உறுப்புக்கள் உருவாகவும், ஒன்று சேரவும் தொடங்குகின்றன மேலும் சிசு முறுக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது என்பதை படம் 2.1ல் நாம் காண முடியும். நபி (ஸல்) அவர்கள் தங்களின் பொன் மொழியொன்றில் கூறுகின்றார்கள்: உங்களில் ஒவ்வொருவரும், உங்களுடைய படைப்பின் ஒவ்வொரு உறுப்புக்களும் உங்களுடைய தாய்களின் கருவில் நாற்பது நாளையில் ஒன்று சேர்க்கப்படுகின்றன| (சஹீஹ் முஸ்லிம் மற்றும் அல்-புஹாரி ஆகியோரால் அறிவிக்கப்படுகின்றது)

நபி (ஸல்) அவர்கள் மற்றொரு தங்களின் பொன் மொழியொன்றில் கூறுகின்றார்கள்:- நுத்பா படிநிலையிலிருந்து 42 நாட்கள் கடக்கும் போது, அல்லாஹ் ஒரு வானவரை அனுப்புகின்றான். அவர் காதுகளையும், கண்களையும், தோலையும், சதையையும் எழும்புகளையும் உருவாக்குகின்றார். பின்பு அவர் இறைவா, இது ஆணா பெண்ணா? என்று கேட்கின்றார், உங்களுடைய ரப்பு அவன் விரும்பியதை முடிவு செய்கின்றான்.|| (முஸ்லிம்).

பேராசிரியர் ஸிம்ப்ஸன் அவர்கள் இந்த இரண்டு ஹதீதுகளையும் விரிவாக ஆராய்ந்து கரு வளர்ச்சிப் படிநிலையில் முதல் நாற்பது நாட்கள் மிகவும் வித்தியாசமான படி நிலையை கொண்டுள்ளது என்பதை கண்டு கொண்டார். இந்த ஹதீதுகள் மிகவும் துல்லியமான முறையில் நாட்களை சொல்வதைக் கண்டு அவர் மிகவும் வியந்து போனார். அவர் கலந்து கொண்ட ஒரு மாநாட்டில் அவர் பின்வரும் கருத்தை வெளியிட்டார்:-

ஆகவே, குறிப்பிடப்பட்ட அந்த இரண்டு ஹதீதுகளும் நாற்பது நாட்களுக்கு முந்தைய முக்கியமான கருவளர்ச்சி நிலையின் குறிப்பான கால அளவை நமக்கு அளிக்கின்றது. மேலும், இந்த ஹதீதுகள் பதியப்பட்ட அந்தக் காலத்தில் கிடைத்த அறிவியல் அறிவை அடிப்படையாகக் கொண்டு இவைகள் உருவாக்கப்பட்டிருக்க முடியாது என்று இன்று காலiயில் பேசிய மற்ற சொற்பொழிவாளர்களால் மீண்டும் மீண்டும் குறிப்பிடப்பட்டது.

அறிவு தேடும் பணியை மதம் வெற்றிகரமான முறையில் வழிகாட்டிட முடியும் என பேராசிரியர் ஸிம்ப்ஸன் அவர்கள்; கூறுகின்றார். நாம் முன்னர் கூறியது போன்று மேற்குலகு இதை நிராகரித்து விட்டது. மதம், அதாவது இஸ்லாம் மார்;;க்கம், இதை வெற்றிகரமாக சாதித்திட முடியும் என முழக்கமிடும் ஒரு அமெரிக்க அறிவியலாளர் இங்கே. நீங்கள் ஒரு ஆலையை நோக்கிச் செல்கின்றீர்கள்: உங்களிடம் அதை இயக்கும் முறையை கூறக்கூடிய புத்தகம் மாத்திரம் உள்ளது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை வைத்தே அந்த ஆலையில் எந்த விதமான இயக்கம் நடந்து வருகின்றது என்பதை தாங்கள் ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம். அந்த புத்தகத்தை உருவாக்கிய ஆலையின் வடிவமைப்பாளர் மற்றும் அதைக் கட்டியவர் ஆகியவருக்கே அதற்கான பெருமை. இந்த புத்தகம் தங்களிடம் இல்லையெனில், அங்கே நடக்கும் பல விதமாக செயல்பாடுகள் பற்றி தாங்கள் தெரிந்து கொள்வதற்கான சாத்தியம் மிகவும் குறைவே.

பேராசிரியர் ஸிம்ப்ஸன் அவர்கள் கூறுகின்றார்கள்:- மதத்திற்கும் மரபணுவியலிற்கும் எந்தவிதமான பிரச்னை இல்லை என்பதை மாத்திரம் இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளவில்லை, காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் அறிவியல் அணுகு முறைக்கு அருள் வெளிப்பாடுகளை சேர்ப்பதன் மூலம் மதம் அறிவியலுக்கே வழி காட்டிட இயலும். மேலும், அறிவியலால் சரி காணப்பட்ட விசயங்கள் திருக்குர்ஆனில் உள்ளன: அதில் காணப்படும் இந்த அறிவு அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளன என்பதையும் நாம் தெரிந்து கொள்ளலாம் என்று நான் கருதுகின்றேன்.

இது உண்மைதான். நிச்சயமாக, அறிவு தேடும் பணியை முஸ்லிம் வெற்றிகரமாக வழி நடத்திட முடியும் மேலும் அதன் சரியான அந்தஸ்தில் அதனை இணங்கச் செய்ய முடியும். மேலும், மேலோனும் புகழ் மிக்கோனுமாகிய அல்லாஹ் இருக்கின்றான் என்பதை நிரூபிப்பதற்கும், முஹம்மது (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தை உறுதி செய்வதற்கும் அறிவை எவ்வாறு உபயோகிப்பது என்பதை முஸ்லிமகள் அறிவார்கள். அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:

நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானது தான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை (உலகத்தின்) பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்குக் காண்பிப்போம்; (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா? (திருக்குர்ஆன் 41:53)

திருக்குர்ஆனில் காணப்படும் அறிவியல் அற்புதங்கள் பற்றிய உதாரணங்களையும், நன்கு உணர்ந்த அறிவியலாளர்களின் விளக்கங்களையும் நன்கறிந்த பிறகு நம்மை நாமே கேட்டுக் கொள்வதாவது:-

· மிகவும் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு துறை சம்பந்தப்பட்ட இந்த அறிவியல் உண்மைகள் பதினான்கு நூற்றாண்டிற்கு முன்பு அருளப்பட்ட திருக்குர்ஆனில் தற்செயலாக இடம்பெற்றிருக்கவா முடியும்?

· இந்தக் குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களாலோ அல்லது வேறு எந்த மானிடராலோ இயற்றப்பட்டிருக்க முடியுமா?

திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்ட அவனுடைய நேரடி வாக்காகத்தான் இருக்க வேண்டும் என்ற ஒன்றுதான் அதற்கான பதிலாக இருக்க முடியும். திருக்குர்ஆன் அல்லாஹ்வின் நேரடி வாக்காகும். அதை அவன் வானவர் ஜிப்ரயீல் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறக்கியருளினான். அது அவர்களால் மனனம் செய்யப்பட்டது. அவருடையை தோழர்களுக்கு வார்த்தைக்கு வார்த்தை சொல்லப்பட்டது. அவர்கள் அதை மனனம் செய்து கொண்டார்கள். எழுத்தில் பதிந்து கொண்டார்கள். அதை நபி (ஸல்) அவர்களிடம் காட்டி சரி பார்த்துக் கொண்டார்கள்.

மேலும், நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளான் மாதத்திலும் வானவர் ஜிப்ரீலுடன் திருக்குர்ஆனை சரிபார்த்துக் கொண்டார்கள். அவர் மரணமாகும் வருடத்தில் இரண்டு முறை சரி பார்த்துக் கொண்டார்கள். திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அதை வார்த்தைக்கு வார்த்தை மிகப் பெரும் அளவிலான முஸ்லிம்கள் மனனம் செய்து வருகின்றார்கள். அவர்களில் சிலர் பத்து வயதிற்குள்ளேயே முழு குர்ஆனையும் மனனம் செய்து விடுகின்றார்கள். இவ்வாறாக, பல நூற்றாண்டுகளாக, திருக்குர்ஆனின் ஒரு எழுத்துக் கூட மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றது என்பது ஆச்சரியத்திற்குரியதல்ல.

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு அருள் செய்யப்பட்ட திருக்குர்ஆன் சமீப காலத்தில் நிரூபிக்கப்பட்ட அறிவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளை கூறியது. திருக்குர்ஆன் இறைவனின் நேரடி வார்த்தை என்பதையும் முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் உண்மையான தூதரும் தீர்க்கதரிசியும் ஆவார் என்பதையும் இது நிரூபிக்கின்றது. மிகவும் முன்னேறிய கருவிகள் மற்றும் நவீன தொழிற் நுட்ப முறைகளைக் கொண்டும் சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அல்லது நிரூபிக்கப்பட்ட உண்மைகளை யாராவது ஒருவர் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு அறிந்திருப்பார் என்று எண்ணுவது அறிவிற்கு அப்பாற்பட்டதாகும்.

குறிப்பு: இக்கட்டுரை என்னுடைய  ஆக்கம் அல்ல,

இந்த கட்டுரை எதிலிருந்து எடுத்தது என்பதை சேர்க்காமல் விட்டு விட்டதை இப்பொழுதான் கவனித்தேன்.

எங்கிருந்து எடுத்தோம் என்பதை தற்போது கண்டுபிடிக்க இயலவில்லை. இன்ஷா அல்லாஹ் விரைவில் கண்டுபிடித்து இனைத்து விடுவேன்.

படிக்கும் சகோதரர்கள் இதற்கு முன் படித்த ஞாபகம் இருப்பின் கீழேயுள்ள காமெண்ட் பகுதியில் விவரிக்கவும்.

நன்றி.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s