அறிவியல் ஆய்வுகள் செய்வது எப்படி ?

experimentgirlஉங்களிடம் ஒரு யோசனை அல்லது ஐடியா இருந்தால், அதை நன்கு வடிவமைக்கப்பட்ட ஒரு சிறந்த அறிவியல் ஆய்வாக,பரிசோதனையாக மாற்றுங்கள். எப்படி ? இதோ உதவி !

பாடப்பிரிவு (subject) மற்றும் குறைந்தது ஒரு கேள்வி உங்களிடம் இருக்க வேண்டும்.அப்படி ஒன்று உங்களிடம் இல்லையென்றால்,  ’அறிவியல் செயல்முறை’ பற்றி நீங்கள் முழுமையாக அறிந்திருக்கிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். (அறிவியல் செயல்முறை பற்றி அறிய இதை சொடுக்குங்கள்) உங்களது கேள்விகளை  கற்பித கொள்கை அல்லது ஊகங்கள் அடிப்படையில் எழுதிக்கொள்ளுங்கள்.

சரி, இப்பொழுது உங்களிடம் ஒரு பொருள் (சப்ஜெக்ட்) மற்றும் பரிசோதித்து பார்க்கக்கூடிய கேள்வி உள்ளது. இவை உங்களிடம் இல்லையென்றால் அறிவியல் முறை scientific method என்னவென்பதை நீங்கள் புரிந்து வைத்திருக்கிறீர்களா என்று பரிசோதித்து கொள்ளுங்கள். உங்கள் கேள்வியை கருதுகோளாக (hypothesis) எழுதிக்கொள்ளுங்கள். உங்கள் ஆரம்ப கேள்வி உதாரணத்திற்கு ‘ நீரில் உப்பின் சுவையை அறிய எவ்வளவு உப்பு சேர்க்க வேண்டும் ?

பொதுவாக , அறிவியல் பரிசோதனை முறையில் இந்த பரிசோதனை கண்காணிப்பு (observations) என்ற பிரிவில் வரும். நம்மிடம் ஓரளவு செய்தி சேர்ந்தவுடன் அதைக்கொண்டு நமது  கருதுகோளை  (hypothesis) எழுத ஆரம்பிக்கலாம். அதாவது ” நீரில் கலக்கப்பட வேண்டிய உப்பின் தன்மையினை அறியும் திறன் எனது குடும்பத்திலுள்ள அனைத்து நபர்களுக்கும் சமமாக இருக்கும் என்பதாகும்”.

ஆரம்ப மற்றும் உயர்நிலை பள்ளி வகுப்புக்களில், ஆரம்பகால பரிசோதனைகளை மேற்சொன்ன முறையில் கருதுகோளை   (hypothesis) உருவாக்குவது மிகுந்த பயன்தரும். பரிசோதனையின் முடிவு ஒத்துப்போகாவிட்டாலும் சரியே !

அனைத்து விபரங்களையும் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.

உங்கள் செயல் திட்டத்தில்  கருதுகோள்  (hypothesis) இருந்தாலும் இல்லாவிட்டாலும், அந்த திட்டத்தை செயல் படுத்தும்போது பின் வரும் வழிமுறைகளை கையாள வேண்டும்.

முதலில் அனைத்து விபரங்களையும் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.

தேவையான பொருட்களை சேகரித்து விட்டு, அவை பற்றிய விபரங்களை முடிந்த அளவு சேகரித்து  குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அறிவியல் உலகில் நாம் செய்யும் பரிசோதனையை மீண்டும் செய்ய வேண்டியிருக்கும் என்பதை முக்கியமாக நினைவில் வைத்திருக்க வேண்டும். இது நாம் செய்யும் ஆய்வு எதிர்பார்த்திராத முடிவுகளை தரும் போது இது மிகவும் அவசியம்.

விபரங்களை எழுதி வைப்பதுடன், நாம் செய்யும் ஆய்வினால் ஏற்படும் பாதிப்புகளின் காரணிகளையும எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.  எடுத்துக்காட்டாக, நமது உப்பு பரிசோதனியில்  வெப்பநிலை என் முடிவுகளை பாதிக்கும் சாத்தியம் உள்ளது.  ஈரப்பதம், பரிசோதனையில் ஈடுபடுத்தப்படுபவர்களின் வயது அல்லது அவர்களில் யாரேனும் மருந்து போன்றவற்றை உட்கொண்டிருத்தல் போன்ற மற்ற காரணிகளும் ஆயவை பாதிக்கும். எனவே, அனைத்து தகவல்களையும் எழுதி வைத்துக்கொள்வது உங்கள் ஆய்வை ஒரு புதிய கோணத்தில் கொண்டு செல்ல வழிவகுக்கலாம்.  இந்த கட்டத்தில் நீங்கள் குறித்து வைத்திருக்கும் தகவல் இனி வரும் காலத்தில் நீங்கள் செய்யவிருக்கும் ஆய்வுகளுக்கு தேவையான செய்தி சுருக்கமாகவோ அல்லது விவாதத்திற்கு உதவலாம்.

ஆய்வில் சேகரிக்கும் விபரங்களை அழித்து விட வேண்டாம்.

உங்கள் திட்டத்தை செயல்படுத்தி அதை பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு கருதுகோள் (hypothesis)அமைத்து அதற்காக  எழுப்பிய கேள்விக்கு நீங்கள் முன்னதாக ஊகித்து வைத்திருந்த பதில்களை உங்கள் ஆய்வின் முடிவின் மீது ஆதிக்கம் செய்ய விட்டு விடாதீர்கள்.  உங்கள் குறிப்புக்கள் நீங்கள் செய்த ஆய்வுக்கு சம்பந்தமில்லாமல் இருப்பினும் அவற்றை தூர எரிந்து விட வேண்டாம். நீங்கள் பதிவு செய்யும்போது சில நேரங்களில் சில அசாதாரண நிகழ்வுகள் நிகழலாம் அவற்றை குறித்து குறிப்பெடுத்துக்கொள்ளவும்.நிராகரிக்க வேண்டாம்.

பரிசோதனை மீண்டும் மீண்டும் செய்யவும்

நீரில் உப்பின் அள்வை தீர்மானிக்க வேண்டும் என்றால், அதை கண்டறியக்கூடிய நிலை வரும் வரை நான் தண்ணீரில் உப்பை சேர்த்து கொண்டே இருக்க வேண்டும். அளவுகளை குறித்து வைத்துக்கொண்டு தொடர வேண்டும். எனினும், அறிவியல் ஆய்வுகளில் ஒரே ஒரு பரிசோதனைக்கு உள்ள மதிப்பு குறைவு. எனவே தேவைப்படும்பட்சத்தில், குறிப்பிடத்தக்க முடிவை பெறும்வரை பரிசோதனைகளை மீண்டும் மீண்டும் செய்யவேண்டியிருக்கும். ஒவ்வொரு முறை செய்யும் ஆய்வுகளின் விபரங்களை சேகரித்து பத்திரப்படுத்த வேண்டும். உப்பு பரிசோதனையை மீண்டும் செய்ய நேரும்போது வேறுவிதமான முடிவை பெற நேரிடும். அப்படி பல நாட்கள் செய்ய நேரிடும்போது அப்பரிசோதனை விபரங்களின் தொகுப்பு ஒரு (Survey) கணக்கெடுப்பு ஆகிறது. ஒரே தரப்பு மக்களிடம் குறுகிய கால இடைவெளியில் எடுக்கப்பட்ட சர்வேக்களில் மாற்றங்கள் இருப்பின் கேட்கப்படும் கேள்விகளை பரிசீலித்து திட்டத்தை மீண்டும் செய்யவேண்டும்.

http://chemistry.about.com/od/sciencefairprojects/a/doscience.htm

இது தொடர்பான பிற பதிவுகள்

அறிவியல் செயல்முறை (The scientific method)

Advertisements

One Comment Add yours

  1. sasikumar சொல்கிறார்:

    very use full

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s