அதிசய மரம்!

222335-Royalty-Free-RF-Clipart-Illustration-Of-A-Tall-Oak-Tree-With-A-Hole-In-The-Trunkஅதிசய மரம் !

காட்டில் சென்று கொண்டிருந்த ஒரு கிராமவாசி ஒரு முதியவரை சந்தித்தார். இருவரும் பேசிக்கொண்டே சென்றபோது அந்த காட்டில் உள்ள ஒரு அற்புத மரத்தை பற்றி முதியவர் கிராமவாசியிடம் சொன்னார். அது என்ன ? என்று கிராமவாசி கேட்க..
” அது ஒரு அதிசய மரம். அந்த மரத்தில் ஒரு பொந்து உள்ளது. அதில் பணத்தை வைத்து விட்டு சிறிது தூரம் சென்று கண்ணை மூடிக்கொண்டு நூறு வரை எண்ணி விட்டு சென்று பார்த்தல் பணம் இரட்டிப்பாகி இருக்கும். ” என்று கூறினார்.

கிராமவாசி தனக்கு அம்மரத்தை காட்டுமாறு கேட்க, அதை காட்டுவதற்கு பகரமாக அம்முதியவர் தனக்கும் பங்கு வேண்டும் என கேட்டார். கிராமவாசியிடம் இருக்கும் பணம் எவ்வளவு என்பது பற்றி கேட்டு விட்டு அம்முதியவர் பணம் இரட்டிப்பாகும் ஒவ்வொரு முறையும் முதியவருக்கு 1 ரூபாய் 20 காசுகள் கமிஷனாக தர வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இருவரும் அந்த மரத்தை வந்து அடைந்தனர். முதியவர், கிராமவாசியிடம் இருந்த பணப்பையை வாங்கி பணத்தை எண்ணிப்பார்த்து விட்டு அவரை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு அந்த மரத்தின் அருகே சென்று பொந்துக்குள் பணப்பையை வைத்து விட்டு கண்ணை மூடிக்கொண்டு நூறு வரை எண்ணினார்கள். பிறகு முதியவர் மரத்தின் அருகே சென்று பொந்துக்குள் கையை விட்டு நீண்ட நேரம் தேடினார். பிறகு பையை கண்டு பிடித்து கொண்டு வந்து கொடுத்தார்.

பணத்தை எண்ணிப்பார்த்த கிராமவாசியின் முகம் மலர்ந்தது. முதியவர் கூறியது போலவே பணம் இரட்டிப்பாகி இருந்தது. ஒப்பந்ததின்படி முதியவருக்கு 1 ரூபாய் 20 காசுகள் கொடுத்து விட்டு மீதி தொகையை பையில் போட்டு இரண்டாவது முறை முன் செய்தது போலவே செய்தனர்.

இரண்டாம் முறையும் இதே போல் தொடர்ந்தது. முன்றாம் முறை பையை எடுத்து வந்த போதும் பணம் இரட்டிப்பாகி இருந்தது ஆனால், முதியவருக்கு கொடுத்தது போக பையில் பணம் ஏதும் மீதி இல்லை !. முதியவர் கிராமவாசியை ஏமாற்றி இருக்கிறார் என்பது தெரிய வருகிறது நமது கேள்வி என்னவென்றால் முதலில் கிராமவாசி பையில் இருந்த பணம் எவ்வளவு ?

Advertisements

2 Comments Add yours

  1. sattanathan சொல்கிறார்:

    answer please

  2. sattanathan சொல்கிறார்:

    supper

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s